THE SHEEP DETECTIVES (2026): அமேசான் பிரைமில் வெளியாகி கலக்கும் ஆடுகளின் துப்பறியும் மிஸ்ட்ரி காமெடி

தி ஷீப் டிடெக்டிவ்ஸ்
தி ஷீப் டிடெக்டிவ்ஸ்
Updated on

மொழி: ஆங்கிலம் / தமிழ் (டப்பிங்)

வகை: மிஸ்ட்ரி காமெடி த்ரில்லர்

டிஜிட்டல் தளம்: அமேசான் பிரைம்

75 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு, 129 மில்லியன் டாலர் வசூல் செய்த படம். 8/5/2026 முதல் அமெரிக்க திரையரங்குகளில் ரிலீஸான இந்த திரைப்படம், இப்போது தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது. குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த க்ளீன் 'யு' (U) சான்றிதழ் பெற்ற படம் இது.

ஸ்பாய்லர் அலெர்ட் (Spoiler Alert) :

நாயகன் ஒரு மிகப்பெரிய ஆட்டுக்கூட்டத்தைப் பராமரிக்கும் ஆட்டு இடையன்.இவனுக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. டீன் ஏஜைத் தாண்டிய அவர்கள் இருவரும் வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிக்கிறார்கள்.நாயகன் ஆடுகளைத் தன் குழந்தைகள் போல் பார்த்துக்கொள்கிறான்.அவைகளுக்கு தேவையான தீவனங்களை போடுவது மட்டுமல்லாமல், தினசரி அவைகளுக்கு கதைப்புத்தகமும் வாசித்துக் காட்டுகிறான். க்ரைம் கதைகள் மற்றும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதைகள்தான் அவனது சாய்ஸ்.

ஆடுகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. நாயகன் கதை வாசித்து முடிக்கும் முன்பே 'லில்லி' என்ற ஆடு க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டை யூகித்துவிடும் அளவுக்கு புத்திசாலி. ஆட்டுக்கூட்டத்தில் லில்லிக்குத் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால், ஆடுகள் தங்களுக்குள் பேசிக்கொள்வது நாயகனுக்கு தெரியாது; ஆடியன்ஸான நமக்கு மட்டும்தான் தெரியும்.

இப்படி இருக்கும்போது, நாயகன் ஒரு நாள் எதிர்பாராதவிதமாகக் இறந்து கிடக்கிறான். போலீஸ் வருகிறது. ஆரம்பத்தில் நாயகன் மாரடைப்பால் இறந்திருப்பான் என்று போலீஸ் நினைக்கிறது. ஆனால், ஒரு முக்கிய தடையம் கிடைத்ததும் நாயகன் கொலை செய்யப்பட்டிருக்கிறான் என்ற முடிவுக்கு வருகிறது.

நாயகன் வளர்த்த ஆட்டுக்கூட்டத்தில் லில்லி என்ற ஆடு, மேலும் சில ஆடுகளுடன் சேர்ந்து கொலைகாரனை எப்படிக் கண்டுபிடிக்கிறது? எப்படி போலீசில் மாட்ட வைக்கிறது? என்பது தான் மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் & நடிகர்கள்

க்ரைக் மசின் கதை, திரைக்கதை எழுத, படத்தை இயக்கியிருப்பவர் கெயில் பல்டா. இவர் ஏற்கனவே 'தி மாஸ்க்' (1994), 'ஜூமாஞ்சி' (1995) உட்பட 18 படங்களில் அனிமேஷன் இயக்குநராகப் பணியாற்றியவர்.

லியோனி ஸ்வாம் எழுதிய 'Three bags full - A Sheep detective story' என்ற நாவலை தழுவித்தான் இந்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

தி ஷீப் டிடெக்டிவ்ஸ்
தி ஷீப் டிடெக்டிவ்ஸ்source:tv insider

நடிகர்களின் பங்களிப்பு

  • ஹியூ ஜேக்மேன் (Hugh Jackman): நாயகனாக இயல்பாக நடித்திருக்கிறார். கெஸ்ட் ரோல் என்றாலும் நல்ல நடிப்பு.

  • மோலி கார்டன் (Molly Gordon): நாயகனின் மகளாக பிரமாதமாக நடித்திருக்கிறார். ஒரு அழகு பதுமை!

  • நிக்கோலஸ் பிரான் (Nicholas Braun): துப்பறியும் போலீஸாக உயிர்த்துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு தரப்பட்ட ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் அருமை.

சபாஷ் இயக்குநர்! (பிளஸ் பாயிண்டுகள்) :

  1. ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதையாக இருந்தாலும், எமோஷனல் கனெக்ட்டை ஆடியன்ஸுக்கு தருவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

  2. ஆடுகளுக்கு தனித்தனிப் பெயர், குணம், கேரக்டர் டிசைன் வடிவமைத்த விதம் மற்றும் அவைகள் பேசிக்கொள்வதில் காமெடி + செண்டிமெண்ட் கலந்த விதம் அருமை.

  3. லில்லி என்ற ஆட்டை வேட்டை நாய்கள் தாக்க வரும்போது, 'செபாஸ்டியன்' என்ற ஆடு தடுத்து சண்டை போட்டு உயிர் தியாகம் செய்யும் காட்சி நெஞ்சை தொடுகிறது.

  4. லைவ் ஆக்ஷன் படத்தில் ஃபோட்டோ அனிமேஷன் கதாபாத்திரங்களை புகுத்திய விதம் அற்புதம். ஒரு ஷாட்டில் கூட இது அனிமேஷன் டெக்னாலஜி என்று தெரியாத அளவுக்கு நேர்த்தி.

  5. "ப்ளூ + மஞ்சள் = பச்சை" என்ற டையிங் மாஸ்டர்களுக்கும், கெமிஸ்ட்ரி மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை வைத்து கொலைகாரனை யூகிக்கும் ஐடியா அருமை.

  6. எம்.ஜி.எம் (MGM) தயாரிப்பு படங்களின் ஓப்பனிங்கில் சிங்கம் கர்ஜிக்கும். இது ஆடு துப்பறியும் கதை என்பதால் ஓப்பனிங் லோகோவில் ஆட்டின் சத்தத்தை மிக்ஸ் செய்த விதம் ரசிக்க வைத்தது.

ரசித்த வசனங்கள்

1 அன்பான ஜீவன்களைப்பார்த்துக்கொள்ளும்போது கிடைக்கும் சந்தோஷமிருக்கே ,அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது

2 ஆண்டவன் சந்நிதியில் எல்லோருக்கும் இடம் உண்டு. ஆடு வெட்டுபவனுக்குமா?

3  ஆடுகள் எப்போதும் கோடைக்காலத்தில் தான் பிறக்கும்.

4 வாழ்க்கைல  எனக்குப்பிடிச்ச மாதிரி எல்லாமே மாறும்னு நினைச்சேன்.

5  பலவீனமானவங்களை பலமானவங்க எப்போதும் ஜெயிக்கக்கூடாது

6 நண்பர்களை ஒரு நாளும் மறக்கக்கூடாது.

7 பொய் சொல்லும்போது  கண் காட்டிக்கொடுத்துடும்

8 நம் நினைவுகளில் மட்டும் தான் நமக்குப்பிடிச்சவங்க உயிரோடு இருப்பாங்க.

நெருடல்கள் (மைனஸ் பாயிண்டுகள்)

  1. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை எளிதில் யூகிக்க முடிகிறது.

  2. கதை நடக்கும் இடத்தில் ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷன், அதில் ஒரே ஒரு போலீஸ் என்பது நம்பும்படியாக இல்லை.

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+

சி.பி.எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் மிகவும் ரசிப்பார்கள்.

ரேட்டிங் 3/5

இதையும் படியுங்கள்:
OTT ரிலீஸ் : பாண்டிராஜின் 'பரிமளா & கோ', சன்னி தியோலின் 'இக்கா' உட்பட 3 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!
தி ஷீப் டிடெக்டிவ்ஸ்
logo
Kalki Online
kalkionline.com