வெளியானது சுந்தரி தொடரின் கடைசி நாள் புகைப்படம்!

Sundari
Sundari
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சுந்தரியின் திருமணத்துடன் சுந்தரி சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இதன் கடைசி நாள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சீரியல்களுக்கு பெயர்போன சன் டிவியில் கயல், சிங்கப்பெண்ணே, மூன்றுமுடிச்சு, மருமகள், சுந்தரி போன்ற சீரியல்கள் கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் டாப்பில் வந்தன. இனியா தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடர்தான் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இந்தத் தொடரில் நாயகியாக நடித்த கேப்ரியல்லா செல்லஸ் இந்த தொடரின்மூலமே பிரபலமாகினார். சுந்தரி பாகம் 1ல் கணவனால் துரோகம் செய்யப்பட்ட கிராமத்து பெண், போராடி கலெக்டர் ஆகிறார். ஸ்ரீகோபிகா நீலநாத் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெய் ஸ்ரீனிவாஸ், மனோகர் கிருஷ்ணா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சுந்தரி சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலின் முதல் சீசன் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஒளிபரப்பானது.  முதல் சீசன் முடிவடைந்த இரு தினங்களிலேயே அதன் இரண்டாவது சீசனை தொடங்கினர். அதில் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சுந்தரி ஐஏஎஸ் ஆன பின்னர் என்னென்ன சவால்களை சந்திக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை உடன் நகர்த்தி வந்தனர்.

இரண்டாம் பாகத்தில், தனது கணவரின் மற்றொரு மனைவியின் குடும்பத்தை ஏற்றுக்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து சமீபக்காலமாக சுந்தரி சீரியலின் தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த சீரியலின் ப்ரோமோ வெளியானது. அதாவது ரஞ்சனி என்ற சீரியல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதுவும் ஒரு பெண் சார்ந்த கதையாகத்தான் இருக்கிறது. இதனால் சுந்தரி சீரியல் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?
Sundari

பின்னர் ரஞ்சனி தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இன்னும் சுந்தரி சீரியல் முடிவுக்கு வரவில்லையே என்று ரசிகர்கள் யோசித்தனர்.

அந்தவகையில் தற்போது சுந்தரி சீரியலின் முடிவுக் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுந்தரியின் திருமணத்துடன் இந்தத் தொடரை முடித்துள்ளனர். கடைசிநாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இது சுந்தரி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.  

logo
Kalki Online
kalkionline.com