நம்ம ஸ்ருதிகாவா இது… எப்படி கோபப்படுறாங்க பாருங்களேன்!

Hindi BB
Hindi BB
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஹிந்தி பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கிய ஸ்ருதிகா தற்போது கோபத்தின் உசத்தில் சண்டைப் போட்டக் காட்சி வைரலாகி வருகிறது.

தமிழ் பிக்பாஸ் போலவே ஹிந்தி பிக்பாஸும் இப்போது தமிழக மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அதற்கு ஒரே காரணம் ஸ்ருதிகாதான். ஸ்ருதிகாவின் காட்சிகள் மட்டும் இங்கு வைரலாகி வருகிறது. மேலும் சிலர் அந்த காட்சிகளை மட்டும் தமிழில் டப் செய்துப் பார்க்கிறார்கள். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஸ்ருதிகாவின் இயல்பான குணம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை ஹிந்தி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை நாடகம் என்று சொல்வார்களா? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு இருந்தது.

அதேபோல் முதலில் ஸ்ருதிகாவை ட்ரோல் செய்தவர்கள், இப்போது அவருக்கே ரசிகர்களாக மாறிவிட்டனர். அந்தளவிற்கு ஸ்ருதிகாவின் உண்மை முகம் வெளிவந்தது. சல்மான் கான் முதல் ஹிந்தி பிக்பாஸ் வரை ஸ்ருதிகாவிடம் சகஜமாக பேசி சிரிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும்.

அந்தவகையில் தற்போது ஹிந்தி பிக்பாஸில் நாமினேஷன் டாஸ்க் நடந்தது. இதில் விபின் என்ற போட்டியாளர் ஸ்ருதிகாவை நாமினேட் செய்தார். பிக்பாஸ் தொடங்கிய புதிதில் இருவரும் அவ்வளவு நட்புடன் இருந்தார்கள். உடனே நம்ம பசங்க அதற்கு அக்கா தம்பி பாடல்கள் போட்டு எடிட் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆனால், இப்போது அவர்களுக்குள்தான் அடிக்கடி சண்டை நடக்கிறது. விபின் ஸ்ருதிகாவை நாமினேட் செய்து, அவர் பாய்ண்ட்டா பேசல, எதுவாக இருந்தாலும் சுற்றி வளைத்து பேசுகிறார் என்றார். அதற்கு‌ தம்பி நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு தெரியும். உங்கள மாதிரி ஆட்களிடம் அப்படித்தான் பேசணும். ஏனா உங்களுக்கு புத்தி இல்ல. மூளை மட்டும்தான் இருக்கு, அறிவு இல்லை என்று ஒரே போடு போட்டு இருக்கிறார்.

ஆனால், ஸ்ருதிகா யாருடன் சண்டைப் போட்டாலும் போடவில்லை என்றாலும், அனைவருக்குமே பொதுவாக பேசுகிறார். தேவைப்படும்போது சப்போர்ட் செய்கிறார். சண்டைப் போடுகிறார்.

ஏனென்றால் பிக்பாஸ், இரண்டு போட்டியாளர்களுக்கு தண்டனை அளிக்கிறார். அதாவது போர்வை இல்லாமல் தூங்க வேண்டும் என்று. யாரும் போர்வை கொடுக்க கூடாது என்றும் சொல்கிறார்.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸாகவுள்ள படங்கள்!
Hindi BB

இதனை ஸ்ருதிகா கண்டித்திருக்கிறார். அதாவது போர்வை வைத்து படுப்பது மனிதனின் உரிமை. இப்படி செய்வது தவறு என்று பேசியிருக்கிறார்.

யாருக்கு சப்போர்ட் செய்து ஸ்ருதிகா பேசுகிறாரோ, அவர்களுடன் தான் சில நிமிடங்களுக்கு முன் சண்டைப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com