டாப் 5 இடங்களை மீண்டும் பிடித்த விஜய் டிவி சீரியல்கள்... வெளியானது இந்த வார சீரியல் TRP!

serials
serialsImg credit: Chennai memes
Updated on

சீரியல்களுக்கு எல்லா ஊர்களிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். வாரம் வாரம் டிஆர்பி என்று எந்த சீரியல் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் வெளியாகும். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

இந்த முறை விஜய் டிவி அடித்து புடித்து டாப் 5 இடங்களை பிடித்து விட்டது. பல வாரங்களுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது எதிர்நீச்சல் சீரியல். ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மறைவிற்கு பிறகு இந்த சீரியல் சற்று கிறங்கடித்து 3ஆம் இடம் 4ஆம் இடத்தில் இருந்தது. தற்போது பரபரப்பை உச்சமாக்கி அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி 10.4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதைதொடர்ந்து சமீபத்தில் முதலிடத்தை பிடித்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் 9.67 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக ரேட்டிங்கில் பின்னால் இருந்த விஜய் டிவி சீரியல்கள் தற்போது முன்னேறியுள்ளது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை தொடர் தான் 9.55 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எப்போதும் டாப் 2 இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் 'கயல்' சீரியல், இந்த வாரம் ரேட்டிங்கில் சற்று பின் தங்கி 9.38 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சென்றது.

இதையும் படியுங்கள்:
மகனை ஹீரோவாக்கிய இயக்குனர் முத்தையா... வைரலாகும் போட்டோ!
serials

இதை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது அண்ணன் தங்கைகளின் பாச பிணைப்புடன் ஒளிபரப்பாகி வரும் 'வானத்தப் போல' தொடர் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 6வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்றுள்ளது.

மேலும் 7வது இடத்தில் 8.43 புள்ளிகளுடன் இனியா சீரியலும், டாப் இடத்தை பிடிக்கும் சுந்தரி சீரியல் 8வது இடத்திற்கும் பின் தங்கியுள்ளது. ஒன்பதாவது இடத்தில், மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்த மகாநதி மற்றும் ஆகா கல்யாணம் தொடர்களும், 10வது இடத்தில் சின்ன மருமகள் சீரியலும் இடம்பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com