இந்த வாரம் டாப் 4 இடங்களை பிடித்த சீரியல்கள்.. மீண்டும் முதலிடத்தில் பிரபல சீரியல்!

சீரியல் டிஆர்பி
சீரியல் டிஆர்பி

பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ஒன்று தான் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி. இதில் ஒளிபரப்பான பல சீரியல்கள் தற்போது மற்ற சேனல்களில் மறு ஒளிபரப்பாகி வருகின்றன.

சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்து தொடர்ந்து சிறப்பான இடங்களை சன் டிவி நிகழ்ச்சிகள் பெற்று வருகின்றன வாரந்தோறும் சேனல்களின் டிஆர்பிக்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதில் தன்னுடைய சீரியல்கள்மூலம் சிறப்பான இடங்களை பெற்றுவருகிறது சன் டிவி. இதில் விஜய் டிவி இரண்டாவது இடங்களையே தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சன் டிவி சீரியல்கள் சிறப்பான இடங்களை பிடித்துள்ளன.

இதில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர், தொட்ர்ந்து இந்த வாரமும் 7.72 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக பாக்கியலட்சுமி தொடர் இந்த வாரமும் 7.22 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆஹா கல்யாணம் சீரியலும், 4வது இடத்தில். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் இடம்பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com