மீண்டும் முதலிடத்தை பிடித்த சன் டிவி... வெளியானது இந்த வார சீரியல் TRP!

top 10 serial TRP
top 10 serial TRP
Updated on

சீரியல்களுக்கு எல்லா ஊர்களிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். வாரம் வாரம் TRP என்று எந்த சீரியல் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் வெளியாகும். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

அதன்படி இந்த வாரம் சன் டி.வியின் சிங்கப்பெண்ணே சீரியல், 11.50 ரேட்டிங்குடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து கயல் சீரியல் 10.60 ரேட்டிங்குடன் 2வது இடத்திலும், வானத்தைப்போல சீரியல் 10.56 புள்ளிகளுடன் TRP ரேட்டிங்கில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும், 10.39 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல் 8.65 புள்ளிகளுடன் இந்த வாரமும் அதே 5-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஹாலிவுட்டில் ரீமேக்காகும் 'த்ரிஷ்யம்'..!
top 10 serial TRP

கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த இனியா சீரியல் இந்த வாரம் 8.56 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது. பல வாரங்களாக டாப் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது 7.41 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் பாக்கியலட்சுமி சீரியல் 7.09 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 6.29 புள்ளிகளுடன் 9-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக TRP ரேட்டிங்கில் இடம் பெறாத ஜீ தமிழ் சீரியல்களில் இந்த வாரம் கார்த்திகை தீபம், 5.95 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com