Drishyam
Drishyam

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் 'த்ரிஷ்யம்'..!

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' திரைப்படம் விரைவில் ஹாலிவுட்டில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் என சினிமா ரசிகர்களை கலங்கடித்து வருகிறது மலையாள திரையுலகம். இந்த மூன்று படங்களுமே மலையாளம் மட்டுமின்றி தமிழ் உட்பட மற்ற மொழி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்து வருகின்றன.

அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் தான் த்ரிஷ்யம். அனைத்து வகை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம் என்றே சொல்லலாம். மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் இதுவரை இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் மூவியாக வெளியான இந்த படம் கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை ரீமேக் செய்ய பலரும் போட்டி போட்டனர். அந்த வகையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக வந்த பாபநாசம் படமும் அமோக வெற்றி பெற்றது. கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் உருவான இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை பெற்றது. இதேபோல், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் த்ரிஷ்யம் ரீமேக்காகி வசூலில் கெத்து காட்டியது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஜோஷுவா இமை போல் காக்க!
Drishyam

இந்த நிலையில் தற்போது த்ரிஷ்யம் படம் ஆங்கிலத்தில் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் த்ரிஷ்யம் படத்தின் இண்டர்நேஷனல் ரைட்ஸை கைப்பற்றியுள்ளது. அதன்படி த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் விரைவில் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யும் வேலைகளை பனோரமா ஸ்டூடியோஸ் தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது. அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த இந்த படம் தற்போது ஆங்கிலத்திலும் வொர்க் அவுட் ஆகுமா என்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com