ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் ரியாலிட்டி ஷோவின் சுவாரசியங்கள்..!

ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்
ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்source:jiotv
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்(Happy Wife Happy Life) தம்பதியருக்கான ஒரு தனித்துவமான பொழுதுபோக்கு மற்றும் ரியாலிட்டி கேம் ஷோ ஆகும். 2026 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இது தம்பதிகளுக்கு இடையே உள்ள புரிதல், அன்பு மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் நிஜ வாழ்க்கைத் துணையுடன் கலந்து கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. தம்பதிகளுக்கு இடையே நடத்தப்படும் சேலஞ்சுகள், குறும்புத்தனமான கேள்விகள் மற்றும் போட்டிகள் மூலம் பார்வையாளர்களுக்கு வயிறு குலுங்கும் சிரிப்பு உறுதி செய்யப்படுகிறது.

வாழ்க்கையின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், சர்ப்ரைஸ்கள் மற்றும் இருவரின் விட்டுக் கொடுக்கும் தன்மையைப் பேசும் எமோஷனலான தருணங்கள் இந்த ஷோவில் இடம் பெறுகின்றன. தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் கலகலப்பான மற்றும் ரசிக்கக் கூடிய பேச்சும், சுவாரஸ்யமான கேள்விகளும் நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமே தொகுப்பாளர் பிரியங்காவின் டைமிங் காமெடி மற்றும் எனர்ஜி தான். தம்பதியர்கள் இடையே இருக்கும் ரகசியங்களை கிண்டலாகப் பேசி வெளிக்கொண்டு வருவதிலும், கணவன்மார்களை வம்புக்கு இழுப்பதிலும் இவரது சுட்டித்தனம் நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரசியத்தை சேர்க்கிறது. தம்பதிகளின் புரிதல், பொறுமை மற்றும் காதலை சோதிக்கும் வகையில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சுவாரசியமான விளையாட்டு சுற்றுகள்:

1) நினைத்தாலே இனிக்கும்:

"நினைத்தாலே இனிக்கும் ரவுண்டில் என்ன நடக்கும் என்றால், எல்லோரிடமிருந்தும் நிறைய புகைப்படங்களை (போட்டோக்கள்) வாங்கி வைத்திருப்பார்கள். அங்கு இரண்டு 'லவ் ட்ரீ' (Love Tree) வைக்கப்பட்டிருக்கும். அந்த லவ் ட்ரீயின் முன்பு தம்பதிகள் வந்து நிற்க வேண்டும். அங்குள்ள இரண்டு லவ் ட்ரீகளிலும் தலா 10 புகைப்படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும்.

அதில், தனது மனைவி என்ன நினைப்பார், எந்தப் புகைப்படத்தைக் கண்டிப்பாக எடுப்பார் என்று கணவர் யோசித்து, அதே மூன்று புகைப்படங்களைக் கணவரும் எடுக்க வேண்டும். கணவன் - மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் 'டெலிபதி' (Telepathy) திறனைச் சோதிக்கும் ரவுண்டு இது

2) சொல்லாமலே:

இந்த 2வது ரவுண்டில் உங்கள் மனைவியை நீங்கள், அவர்கள் சொல்லாமலே எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் டாஸ்க். துணையை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையாக பதிலளிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு மனைவிகள் தரும் செல்லமான தண்டனைகள் ரசிகர்களை உண்மையிலேயே ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன.

3) தள்ளிப்போகாதே:

இந்த மூன்றாவது சுற்று, தம்பதியராக ஜோடியாக விளையாடாமல் தனித்தனியாக விளையாடும் சுற்றாகும். விளையாட்டு என்பதைத் தாண்டி, நீங்கள் தினந்தோறும் ஒருவருக்கொருவர் பேசாத சில விஷயங்களையும், உங்கள் பார்ட்னரிடம் கேட்காத சில கேள்விகளையும் இந்தச் சுற்றில் கேட்கப் போகிறோம். கணவனும் மனைவியிடம் இதைப் பற்றி இதுவரை பேசாமல் இருந்திருக்கலாம்.

அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு, அவர்கள் தரும் பதில்கள் மூலம் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் உணர்வுகளை எவ்வளவு புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தங்களது மனதில் தோன்றும் அழகான, உண்மையான பதிலைக் கூற வேண்டும். 'ஆமாம், அது அப்படித்தான்' என்று தோன்றினால், தங்களது நாற்காலியை ஒரு படி தள்ளிப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டும்; இல்லையென்றால் அதே நாற்காலியிலேயே அமர்ந்திருக்கலாம். கணவன் - மனைவி இருவருக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி (Chemistry) மற்றும் புரிதலை மதிப்பிடும் சுற்று இது.

இந்த நிகழ்ச்சி தம்பதியரின் புரிதலையும், குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதில் தம்பதியரின் அன்பையும், புரிதலையும் சோதிக்கும் வகையில் மூன்று சுற்றுகள் இடம்பெறும்.

Smart Tv
Smart Tv

எமோஷனல் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்கள்:

கேளிக்கைகள் தாண்டி, தம்பதிகள் தங்களது கடினமான காலங்கள், காதல் கதைகள் மற்றும் ஒருவருக்கொருவர் செய்த தியாகங்களை மேடையில் பகிர்ந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யம். ராமர், அன்சார் போன்ற பிரபலங்கள் தங்களது குடும்ப நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பொழுது மேடையே கண்கலங்கியது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களும் மனதை தொடுகின்றன.

ஸ்பெஷல் தீம்கள்:

ஒவ்வரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தீம் அடிப்படையில் பிரபலங்கள் அழைக்கப்படுகின்றனர். சின்னத்திரை மாமியார்களும் அவர்களது கணவர்களும் பங்கேற்ற சுவாரசியமான எபிசோடு. டிவி காதல் ஜோடிகளான, சீரியல் மற்றும் தொலைக்காட்சி மூலம் காதலித்து கரம் பிடித்த மைனா-யோகேஷ், பவனி-அமீர், ஷாரிக்-மரியா போன்ற ஜோடிகளின் ஸ்பெஷல் எபிசோடுகள். குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் தங்களது இணையுடன் வந்து அட்ராசிட்டி செய்யும் எபிசோடுகள் கலகலப்பானதாக இருந்தன.

வைஃபை பாரு .. லைப்பே ஜோரு என்ற டேக்லைனுடன் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு நேரத்தை குடும்பத்தோடு ரசிக்கும்படி மாற்றி, தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பை மிகவும் அழகாகக் காட்டி வருகிறது இந்த ரியாலிட்டி ஷோ.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ஒரு போதையா? தேசிய விளையாட்டு எது? அதிரடி வசனங்களால் அதிரவைக்கும் புதிய படம் 'அங்கீகாரம்'!
ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்
logo
Kalki Online
kalkionline.com