ரசிகர்களே ரெடியா: ‘குக் வித் கோமாளி 7’... எப்போது தொடங்கும்? லீக்கான தகவல்..!

பிக்பாஸ் சீசன் 9, கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் குக் வித் கோமாளி எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
CWC
CWC
Published on

விஜய் டிவியில் வரும் சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் 2019ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு இருந்த அதே வரவேற்பு தற்போது நடந்த 6-வது சீசன் வரை இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதில், ஒவ்வொரு சீசனுக்கு சீசன் குக்குகள் மாறுவர்கள், கோமாளிகளில் ஒரு சில பேர் மாறுவார்கள். சாதாரண சமையல் நிகழ்ச்சியை மட்டும் காட்டாமல், அதில் காமெடியை கலப்பதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக் காரணம். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சவால், டாஸ்குகள் மற்றும் காமெடி டிராமாக்கள் நிகழ்ச்சியை ரசிகர்கள் சலிக்காத வண்ணம் கொண்டு செல்லும்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியானது, எப்போதும் பிக்பாஸ் சீசன் முடிந்த சில மாதங்களில் தொடங்கும். அந்த வகையில் மக்கள் மத்தியில், நீங்கா இடம்பிடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
முதல் முறையாக ‘குக் வித் கோமாளி’யில் ‘Secret Box Challenge’: அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள்...!
CWC

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசன் முடிந்ததும், வழக்கம்போல் அடுத்ததாக ‘குக் வித் கோமாளி’ எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு உருவான நிலையில் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, மே மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 6 சீசன்களாக, செஃப் தாமு முக்கிய நடுவராக இருந்து வருகிறார். இரு சீசன்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் விலகி சன் டிவியில் டாப்பு குக் டூப்பு குக் ஷோவிற்கு சென்ற பிறகு அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ், 5வது சீசனில் புதிய குக்காக உள்ளே நுழைந்தார்.

கடந்த சீசனில், செஃப் கெளசிக் சங்கரும் இதில் ஒரு நடுவராக சேர்ந்தார். இந்த சீசனிலும் நடுவர்களாக இந்த மூவரின் கூட்டணியே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி 7-வது சீசனில், ரசிகர்களின் ஃபேவரைட் கோமாளிகளான புகழ், குரேஷி, சுனிதா, சரத் உள்ளிட்டோர் இந்த சீசனிலும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில் இவர்களுடன் சில புதிய கோமாளிகளும் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்பது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
முதல் முறையாக...! 'பிக் பாஸ்' - 'குக் வித் கோமாளி' இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரே டைட்டில் வின்னர்!
CWC

இந்த வகையில் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 9-ல் போட்டியாளர்களில் சிலர் இதில் போட்டியாளர்களாக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். அதேபோல் சீரியல் மற்றும் சினிமா நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சேனல் தரப்பில் நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பணிகள், போட்டியாளர்கள் தேர்வு போன்றவை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com