ராதிகா செய்த செயல்... ரிலீஸ் ஆன ஈஸ்வரி...!

Baakiyalakshmi
Baakiyalakshmi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரி நிராபராதி என நிரூபணமாகி ரிலீஸ் செய்யப்படுகிறார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மனோஜை அடி வெளுக்கும் அண்ணாமலை... அனல் பறக்கும் புரோமோ!
Baakiyalakshmi

இந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு எதிராக திரும்ப கடைசி நேரத்தில் பாக்கியா மயூவை அழைத்து வந்து சாட்சி சொல்ல சொன்னார். அதில் ஈஸ்வரி நிரபராதி என நிரூபணமானதால் அவரை கோர்ட் ரிலீஸ் செய்தது. இதனை தொடர்ந்து கடுப்பான ராதிகா இன்றைய எபிசோட்டில் யாரை கேட்டு என் பொன்னை கோர்ட்டிற்கு அழைத்து வந்தீர்கள் என பாக்கியாவிடம் சண்டைக்கு செல்கிறார்.

மேலும் பொய் புகார் கொடுத்ததற்காக கமலாவையும் லெப்ட் ரைட் வாங்குகிறார். தொடர்ந்து வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை மொத்த குடும்பமும் வரவேற்று சிரிக்க வைக்க முயற்சிக்கிறது. பாக்கியாவும் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல, பதிலுக்கு ஈஸ்வரி பாக்கியாவிற்கு நன்றி கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

logo
Kalki Online
kalkionline.com