பிக்பாஸில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி!

BB 8
BB 8
Published on

தமிழ் பிக்பாஸ் சீசன் 8ல் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெறவுள்ளது. இந்த செய்தியை கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். மேலும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் பங்கேற்றனர். இதனையடுத்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறியிருக்கிறார்கள்.

அதேபோல் இந்த வாரம் ரானவ் மற்றும் மஞ்சரி எவிக்ட் ஆகி வெளியேறி இருக்கிறார்கள். ராயன் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மத கஜ ராஜா படத்தில் நடித்த மறைந்த நடிகர்கள்!
BB 8

இப்போது 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் பணப்பெட்டி வருகிறது. இப்படியான நிலையில் ஒரு ஷாக் நியூஸ் வந்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 8ல் இதற்கு முன்னர் வெளியேறிய நபர்கள் மீண்டும் உள்ளே வருகிறார்கள். இதனை வைல்டு கார்டு Knock out என குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்தான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் தீபக் ரூல்ஸ் படிக்கிறார். அதாவது இரண்டு எக்ஸ் போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள். மீண்டும் போட்டிகள் நடைபெறும். இதில் அந்த போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வீட்டில் இருக்கும் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மீண்டும் எவிக்ஸன் நடக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து யார் யார் வரப்போகிறார்கள். என்ன போட்டி நடக்கும். யார் வெளியேறப்போகிறார்கள் போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவியேற்ற 6 இந்திய வம்சாவளியினர்!
BB 8

இந்த செய்தியை கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் மிகப் பெரிய ஷாக்கில் உள்ளனர். மீண்டும் முதலிலிருந்து வரவேண்டுமா என்று ஜாக்குலின் வாயைப் பிளக்கிறார். முழு பலத்தையும் போட்டு விளையாடுவோம் என்று முத்து பாஸிட்டிவாக பேசுகிறார்.

ராயன் தேவையில்லாமல் ஷாக் ஆகிறார். அவருக்கு எந்த பாதிப்பும் வரவே வராது.  நேரடியாக இறுதிச் சுற்றுக்கு செல்வதால், அவர் போட்டிகளைப் பார்த்து ரசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com