கடந்த 2012ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மத கஜ ராஜா படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், இந்த படத்தில் நடித்த மறைந்த நடிகர்கள் பற்றிப் பார்ப்போம்.
2012ம் ஆண்டே மத கஜ ராஜா படத்தை வெளியிடுவதற்காக சுந்தர் சி வேக வேகமாக படத்தை எடுத்து முடித்தார். ஆனால், சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மேலும் 2012ம் ஆண்டிற்கு பின் மறைந்த சில நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
முதலாவதாக மணிவண்ணன். பல படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவர், கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார். இன்றும் இவரின் நகைச்சுவையும், நடிப்பும் இன்றைய மக்களுக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்தவகையில் இவரையும் இந்தப் படத்தில் மீண்டும் பார்க்கவுள்ளோம். இது அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்ற உணர்வையும் கொடுக்கலாம்.
இதனையடுத்து மனோபாலா. தனது காமெடியான நடிப்பிலும், தனித்துவமான உடல் மொழியிலும் மக்கள் மனதைக் கவர்ந்தார். இவர் 2023ம் ஆண்டு தனது 69 வயதில் உயிரிழந்தார். இவரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
மத கஜ ராஜா படத்தில் மயில்சாமியும் நடித்திருக்கிறார். இவரும் காமெடி நடிகராக ஒரு மூச்சு வலம் வந்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர். இவர் 2023ம் ஆண்டு தனது 57 வயதில் உயிரிழந்தார்.
சிட்டிபாபு. இவரும் காமெடி நடிகராக வலம் வந்தவர். இவர் 2013ம் ஆண்டு 49 வயதில் உயிரிழந்தார்.
மத கஜ ராஜா படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாவதால், இதற்கு இடைபட்ட காலத்தில் உயிரிழந்தவர்கள் நடித்திருக்கின்றனர். இது ரசிகர்களின் பேர் எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. இது ஒரு காமெடி படம் என்பதால், இறந்த காமெடி நடிகர்கள் அனைவரும் நடித்திருக்கின்றனர்.
மேலும் சந்தானமும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பின்னர்தான் படிபடியாக அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் விஷால் பாடிய ஒரு பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.