2024-ல் காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்!

Cinema Celebrities weddings in 2024
Cinema Celebrities weddings in 2024

2024 ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளநிலையில், இந்த ஆண்டு பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தாண்டு திருமணம் செய்த சில தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

1. கீர்த்தி சுரேஷ் - ஆன்டனி தட்டில்:

Keerthy Suresh - Antony Thatti
Keerthy Suresh - Antony Thattil

முன்னணி நடிகையா வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவரது பள்ளி பருவ தோழனான ஆன்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணம் இந்த மாதம் 12ம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக நடந்தது.

2. வரலட்சுமி - நிக்கோலாய்:

Varalaxmi - Nicholai
Varalaxmi - Nicholai

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு, கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி தாய்லாந்தில் தொழில் அதிபரான நிக்கோலாய் சச்தேவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் காதல் திருமணமாகும்.

3. ஐஸ்வர்யா - உமாபதி:

Aishwarya arjun - umapathy ramaiah
Aishwarya arjun - umapathy ramaiah

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்ததை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மத்துடன் வெகு விமர்சனமாக திருமணம் நடைபெற்றது.

4. காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர்:

Kalidas Jayaram - Tarini Kalingarayar
Kalidas Jayaram - Tarini Kalingarayar

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவர் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவருவருக்கும் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி திருமணம் நடந்தது.

5. நாக சைதன்யா - சோபிதா துலிபாலா:

Naga Chaitanya - Sobhita Thulipala
Naga Chaitanya - Sobhita Thulipala

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு காதலித்து வந்த சோபிதா துலிபாலாவை கடந்த 4 ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.

6. ரகுல் பிரீத் - ஜாக்கி பக்னானி:

Rakul Preet -Jackky Bhagnani
Rakul Preet -Jackky Bhagnani

தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங், 'தேவ்', 'என்.ஜி.கே', 'அயலான்' 'இந்தியன் 2' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து வந்த நிலையில் கோவாவில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

7. சோனாக்ஷி சின்ஹா - சாஹீர் இக்பால்:

Sonakshi Sinha - Zaheer Iqbal
Sonakshi Sinha - Zaheer Iqbal

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான நடிகை சோனாக்ஷி சின்ஹா, பல வருடங்களாக நடிகர் சாஹீர் இக்பாலை காதலித்து வந்தார். இதனையடுத்து, இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
2024 ஆம் ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள்!
Cinema Celebrities weddings in 2024

8. ரம்யா பாண்டியன் - லொவெல் தவான்:

Ramya Pandian - Lovel Dhawan
Ramya Pandian - Lovel Dhawan

ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், யோகா மாஸ்டரான லொவெல் தவான் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் நவம்பர் 8ம் தேதி கங்கை நதி கரையில் பிரம்மாண்டமாக நடந்தது.

இதையும் படியுங்கள்:
2024 - kalkionlineல் அதிகம் படிக்கப்பட்ட Top 10 கட்டுரைகள்!
Cinema Celebrities weddings in 2024

9. சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி:

Siddharth -Aditi Rao Hydari
Siddharth -Aditi Rao Hydari

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் தெலுங்கானாவில் உள்ள 400 வருடங்கள் பழமை வாய்ந்த வானார்பதி கோயிலில் செப்டம்பரில் நடைபெற்றது. சித்தார்த்தும் அதிதி ராவும் 'மகா சமுத்திரம்' படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்:
2024-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்: 6வது இடத்தை பிடித்த விஜய்சேதுபதி படம்!
Cinema Celebrities weddings in 2024

10. மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு:

Megha Akash - Sai Vishnu
Megha Akash - Sai Vishnu

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ் பிரபல அரசியல்வாதியின் மகனான சாய் விஷ்ணு என்பவரை இந்த வருடம் செப்டம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com