2024-ம்ஆண்டு இன்னும் மூன்றே வாரங்களில் முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு திரைத்துறையினருக்கு அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் நிறைந்ததாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
சிறிய ஆரவாரத்துடன் வந்த சில சிறிய பட்ஜெட் படங்கள் பெரிய பிளாக்பஸ்டர்களாக மாறினாலும், சில பெரிய பட்ஜெட் படங்கள், வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, வழக்கமான எதிர்பார்ப்புகளை உயர்த்தி பரிதாபமாக தோல்வியடைந்தது.
இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2024-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் கலவை இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில், பாலிவுட் திரைப்படங்களின் ஆதிக்கம் மட்டும் பிரதிபலிக்கிறது, ஆனால் இந்தியாவின் பன்மொழிப் படங்களின் மூலம் மகாராஜா, மஞ்சுமேல் பாய்ஸ், ஹனு-மேன் மற்றும் ஆவேசம் போன்ற தென்னிந்தியப் படங்களுடன் இணைந்துள்ளது.
ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த இயக்குனர் அமர் கௌஷிக்கின் ஹாரர் காமெடி ஸ்ட்ரீ 2 திரைப்படத் தேடல் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, 2024ல் அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாகவும் உருவெடுத்தது,
பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் நாக் அஸ்வினின் காவிய கதை ‘கல்கி 2898 ஏடி’ இரண்டாவது இடத்தைப் பிடித்ததுள்ளது. ‘கல்கி 2898 ஏடி’ 2024-ன் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகவும், வெளியான பிறகு எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மூன்றாவது தெலுங்குப் படமாகும்.
3-வது இடத்தை விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் வெளியான ‘12 த் பெயில்’ இந்தி படம் பெற்றது. பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கிய இப்படம் ஐபிஎஸ் பட்டம் வென்ற மனோஜ் குமார் சர்மாவை பற்றியது.
4-வது இடத்தை ‘லாபடா லேடீஸ்’ என்ற இந்தி படம் பிடித்துள்ளது. கிரண் ராவ் இயக்கிய லாபாதா லேடீஸ், இந்தியாவின் கிராமப்புறங்களில் தொலைந்து போன இரண்டு மணப்பெண்களைப் பற்றிய நகைச்சுவைப் படமாகும்.
இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் 5-வது இடம் ‘ஹனுமான்’ என்ற தெலுங்கு படத்துக்கும் கிடைத்துள்ளது.
நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள 'மகாராஜா' திரைப்படம் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
7-வது இடம் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கு கிடைத்தது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ படத்துக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார்.
பிரசாந்த் நீல் இயக்கியத்தில் பிரபாஸ் நடித்துள்ள 'சாலார்' தெலுங்கு படம், மூச்சடைக்கக்கூடிய சண்டைக்காட்சிகள் கொண்ட ஆக்ஷன் படமாகும். இந்த படம் கூகுல் தோடலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
10-வது இடத்தை பகத்பாசில் நடித்த ‘ஆவேசம்’ மலையாள படம் பெற்றுள்ளது. இதுநகைச்சுவை மற்றம் த்ரில்லர் படமாகும். இந்த படத்தில் ஃபஹத் ஃபாசிலின் வலுவான நடிப்பு, இறுதி வரை பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.