

இந்த வாரம் 8 நேரடித் தமிழ்ப் படங்கள், 3 மலையாள டப்பிங் படங்கள் என ஆக மொத்தம் 11 திரைப்படங்கள் வெளியாகின்றன.
1. காதல் ரீசெட் ரிப்பீட் (Kaadhal Reset Repeat):
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள ரொமாண்டிக் டிராமா இது. இந்தப்படத்தின் திரைக்கதையை பாகுபலி படத்தில் உதவி திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய ஆர். மகாதேவ் தான் எழுதி இருக்கிறார்.இவர் இயக்குனர் ராஜ்மவுலியிடம் உதவியாளர் ஆகப்பணியாற்றியவர் . இசை ஹாரிஸ் ஜெயராஜ்.நாயகிக்கு தலையில் அடிபட்டு பழசை எல்லாம் மறந்து விடுகிறார். அவருக்கு திருமணம் ஆனதும் நினைவில்லை.கணவர் யார் என்றும் நினைவில் இல்லை.இதனால் உருவாகும் காமெடி கலாட்டாக்கள் தான் மொத்தக்கதையும்.
மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.படம் வெளியாகும் முன்பே இரண்டு பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன. ட்ரெய்லரை பார்க்கும்போது ஒளிப்பதிவும்,இசையும் படத்துக்கு முக்கிய தூண்கள் என்பது தெரிகிறது.
புதுமுக நாயகன் மது மகேஷ்,அறிமுக நாயகி ஜியா சங்கர் இருவரும் தம்பதி ஆக நடிக்க விஜி சந்திர சேகர்,எம். எஸ்.பாஸ்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இதில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
2. ஓ பட்டர்பிளை (O Butterfly):
விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவரும் ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் படம் .நிவேதிதா,சிபி,நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். வைசாக் சோம்நாத் இசையில் 'போகாதே' என்ற பாடல் யூ டியூபில் வெளியாகி செம ஹிட் அடித்திருக்கிறது.ஒரு படம் வெளியாகும் முன்பே பாடல் ஹிட் ஆகி விட்டால் அந்தப்படத்துக்கான எதிர்பார்ப்பு கூடுகிறது.
கணவன் ஒரு சைக்கோ பேஷண்ட்; அவருக்கும் நாயகிக்கும் இடையில் ஒரு வில்லன் குறுக்கே வருகிறான். அதன் பின் நடக்கும் சம்பவங்களே திரைக்கதை. இளைஞர்களைக் கவரும் வகையில் இது இருக்கும் எனத் தெரிகிறது.
யூத்களுக்கு பிடிக்கும் வகையில் காட்சிகள் இருக்கும் போல் தெரிகிறது.யூ டியூபில் வெளி வந்த ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது
3. வடம் (Vadam):
டி.இமான் இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி இருக்கிறது.விமல் நாயகனாக நடிக்க, நட்டி (நடராஜ்), முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் மசாலா திரைப்படம் இது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.சங்கீதா கல்யாண்,சங்கீதா கல்யாண் குமார்,பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
4. முஸ்தபா முஸ்தபா (Mustafa Mustafa):
காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் காமெடி படம் இது.ட்ரெய்லர் யூ-டியூபில் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.பிரதீப் மகாதேவன் தயாரிக்க பிரவீண் சரவணன் இயக்கிய படம் இது.
சுரேஷ் ரவி,ஐஸ்வர்யா தத்தா,லிவிங்க்ஸ்டன் மோனிகா சின்னகோட்லா,மானசா சவுத்ரி,கருணாகரன்,சாமஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.'காதல் தேசம்' படத்தின் புகழ்பெற்ற பாடல் வரியையே தலைப்பாக வைத்துள்ளனர். இது ஒரு டார்க் காமெடி படம்.
5. 99/66:
படத்தின் டைட்டிலே தொண்ணூற்று ஒன்பது/அறுபத்தி ஆறு தான்.இது ஒரு திகில் படம். 99 வீடுகளை கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் 66ம் எண் வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை பற்றிய கதை தான் இது.
எம்.எஸ்.மூர்த்தி கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி,இசையமைத்துத் தயாரித்துள்ளார்.சபரி,ரோகித், ரக்ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.இது ஒரு லோ பட்ஜெட் படம்.
6. யார்றா அந்தப் பையன் நான் தான் அந்தப் பையன்:
கணவனை இழந்த நாயகிக்கும், மனைவியைப் பிரிந்து வாழும் நாயகனுக்கும் இடையே மலரும் ரகசியக் காதல் பற்றிய கதை. இவர்களுக்கு வில்லனாக ஒரு போலீஸ் அதிகாரி வருகிறார். அவரும் நாயகியை அடைய விரும்புகிறார்.இந்த முக்கோணக்காதல் போராட்டம் தான் மீதிக்கதை. பால்ராஜ் என்பவர் நாயகனாக நடித்து ,கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்.தயாரிப்பும் அவரே.
நாயகியாக காயத்ரி ரெமா,இன்னொரு நாயகி ஆக ஸ்வேதா ஸ்ரீ நடிக்க, இயக்குநர் ரவி மரியா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
7. செல்லமடா நீ எனக்கு:
பெற்ற அம்மாவை வெறுக்கும் மகன்கள் உலகில் பலர் உண்டு.ஆனால் மகனை வெறுக்கும் அம்மா உலகில் எங்கும் இல்லை.இந்தக்கருவில் உருவாகி இருக்கும் படம் இது.
நாயகன் அம்மாவை வெறுக்கிறான்.அவனுக்கு ஒரு பெண் மீது காதல் உண்டு.நாயகனின் அம்மா நாயகனை உயிர் ஆக நேசிக்கிறார்.அவனுக்காகவே வாழ்கிறார்.நாயகன் எதனால் அம்மாவை வெறுக்கிறான் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு.வசீகரன், நேஹா, போஸ் வெங்கட், அமுதவாணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனந்த சிவம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
8. வசூல் மன்னன் (Vasool Mannan):
'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து பிரபலம் ஆன ஸ்ரீதேவ் நடிப்பில் உருவான படம் இது . அஜித் நடித்த துணிவு , ரஜினி நடித்த வேட்டையன் ஆகிய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்த இவர், முதன் முதலாக கதாநாயகன் ஆக நடிக்கும் படம் இது.
கிராமத்தில் நடக்கும் காதல் கதை போல ட்ரெய்லரில் இருந்து தெரிகிறது. நாயகியாக புதுமுகம் நடிக்கிறார். வேல ராம மூர்த்தி, இமான் அண்ணாச்சி போன்ற குணசித்திர நடிகர்களும் உண்டு.என் பொண்ணு அப்படி இப்படின்னு இருந்ததால மூணு மாசம் முழுகாம இருக்கா.திருமணத்துக்கு முன்பே கர்ப்பமா ஆகிவிட்டாலும் ரொம்பத்தங்கமான பொண்ணு என்ற காமெடி டிராக் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து பேசுபொருள் ஆகி உள்ளது.இது ஒரு லோபட்ஜெட் படம் போல தெரிகிறது.
டப்பிங் படங்கள் (Malayalam Dubbed):
9. அனோமி (Anomi):
இது 6/2/2026-ல் மலையாளத்தில் ரிலீஸ் ஆன படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன்.காணாமல் போன நபரை தேடி செல்லும் க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் படம் இது.ரகுமான்,பாவனா,பினு பாப்பு , மற்றும் பலர் நடித்த இந்தப்படத்தை இயக்கி இருப்பவர் ரியாஸ் மராத்.நம்ம ஊர் டி ஆர் மாதிரி இவரே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,தயாரிப்பு என ஆல் இன் ஆல் இவரே தான்.
நாயகி பாவனா இணை தயாரிப்பாளர்.இந்தப்படமும் மீடியமாகத்தான் கேரளாவில் ஓடியது. மலையாள பத்திரிக்கைகள் தங்கள் விமர்சனத்தில்,சராசரி க்ரைம் திரில்லர் என குறிப்பிட்டு உள்ளனர்.
10. த ரைஸ் ஆப் அசோகா (The Rise of Ashoka):
இது இந்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் ரிலீஸ் ஆன மலையாள படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன்.இது ஒரு கிராமத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதை.
ஒரு ஊரில் கேங்க்ஸ்டர் குழுவால் தன் இன மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு வெகுண்டு எழுந்த நாயகன் அவர்களை அடக்குவது தான் கதை.மாமூல் ஆக்ஷன் மசாலா படம்.சதீஷ் நிவாசம்,சப்தமி கவுடா நடிக்க பி. சுரேஷா இயக்கி இருக்கும் படம்.
இந்தப்படம் கேரளாவில் சரியாகப்போகவில்லை.வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இந்த படத்தை வாழ வைக்குமா? தியேட்டரை விட்டு ஓட வைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
11. மூரி (Moori):
2022-இல் மலையாளத்தில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் தமிழ் வடிவம். போலீஸ் அதிகாரிகளான நாயகனும் நாயகியும் ஒரு சிக்கலான கிரைம் கேஸை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை.
இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேசன் மூவி