விழுப்புரம் சின்னையா மன்றாயர்-ராஜாமணி அம்மையாருக்கு 1.10.1928ல் அவதரித்த அருந்தவப் புதல்வரே, கலையால் வளர்ந்த, கலைத்தாயின் கலைக்குரிசில், செவாலியே சிவாஜிகணேசன் எனும் நடிப்புலக மாமேதை அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் நினைவலைகளோடு நடைபோடுவோம்.
கப்பலோட்டிய தமிழனாய் வாழ்ந்து காட்டி சிம்மக்குரலாய் கர்ஜித்த சீா்மிகு சிவகாமியின் செல்வரே!
மராட்டியமன்னர் சத்ரபதி சிவாஜியை கண்முன்னே நிறுத்திய நடிப்பிசை நாயகரே. வியட்நாம் வீடு தந்த வித்தகரே!
சிவபெருமானை அச்சு அசலாய் நடிப்பிலும் வேஷத்திலும் நடையிலும் வாழ்ந்து காட்டிய வல்லவரே, நல்லவரே!
கர்மவீரர் காமராஜரின் வழிவந்த சீா்மிகு சிந்தனையாளரே!
நடிப்பால் உயரிய விருதுகளை அடைந்து நாட்டுக்காக நல்ல பல பல உதவிகள் செய்த நட்சத்திரமே! திாிசூலமே!
பேச்சால் நடையால் வசன உச்சரிப்பால் கண் அசைவால் நடை உடை பாவனையால் நானிலமே புகழும் வண்ணம் நடிப்பாற்றல் கொண்ட நவரசமே!
பலரும் வியக்கும் வகையில் நடிக்கும் பாத்திரமாகவே மாறி பாா்போற்ற வாழ்ந்த வையகமே, கந்தக்கடவுளை கண்முன்னே கொணர்ந்து காட்டிய கந்தவேளே!
அவன்தான் மனிதன், அவன்தான் நடிகன் என ஊரேபோற்றும் வகையில் நடிப்பால், உழைப்பால் உயர்ந்த உத்தமபுத்திரனே.
அன்னையின் ஆணையை மதித்தவரே, தனக்கென ஒரு பானியை கடைபிடித்து தரணி புகழ வாழ்ந்த தங்கப் பதக்கமே!
நடிப்பில் நவரசம் காட்டிய, நவராத்திாிபடம் தனை சொல்லவா, மூன்று வேடங்களில் ஆளுமை, காருண்யம், நளினம், காட்டிய நடிப்புலக சக்கரவர்த்தியே!
எத்தனை எத்தனை வேடங்கள் முதல் படமான பராசக்தியில் குணசேகரனாய், கவசகுண்டலம் தந்த கர்ணனாய், நாதஸ்வர வித்வான் சிக்கலாராய், பெருமாள் வேடம் தாங்கிய திருமால் பெருமையாய், சிறு வயதில் வயதான நடிப்பில் அனைவரையும் அசர வைத்த அப்பூதி அடிகளாய், வீரமிகு வீரபாகுவாய், சகோதரி பாசம் காட்டிய பாசமலராய், எம் ஐி ஆரோடு இணைந்த கூண்டுக்கிளியாய், ஜமீன்தாராய் வேடமிட்டு நடித்து வசந்த மாளிகை தந்த எங்கள் தங்க ராசாவாய், வீரமிகு நடிப்பால் வசனம் பேசிய வீரபாண்டிய கட்டபொம்மனாய், படிக்காத மேதையாய், அருமையான நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞனே! நின் புகழ் பாட எத்தனை எத்தனை படங்கள், அடுக்கிக்கொண்டே போகலாம்.
கலைத்தாயின் கலை மகனே, தமிழகம் தந்த தலைமகனே, எத்தனை வேடங்கள் தாங்கினாலும் அத்தனைக்கும் கெளரவம் தந்த பிறவிக்கலைஞனே, உமக்கு நிகர் நடிப்பில் நவரசம் காட்டிட வேறு ஒருவர் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை, பன்முகமான நடிகரின் பிறந்த நாளில் அவர்தம் புகழ் பாடுவோம்!