
2026 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளோம். கடந்த 2025 ஆம் ஆண்டில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அதில் சில சம்பவங்கள் நம் மலரும் நினைவுகளாகவும், சில சம்பவங்கள் மன கசப்புகளையும் கொடுத்திருக்கும். அந்த வகையில் கடந்த 2025ஆம் ஆண்டில் எந்தெந்த சினிமா பிரபலங்களுக்கு திருமணம் நடந்துள்ளது என்பதை ரீவைண்ட் செய்து பார்க்கலாம் வாங்க.
2025 ஏப்ரல் மாதம் 20ம் தேதி பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி, சக போட்டியாளரான அமீரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர். இந்நிலையில், 2025-ம் ஆண்டு வசி என்பவரை பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகின.
நாடோடிகள் பட நடிகை அபிநயா, தன்னைப் போல் மாற்றுத்திறனாளியான வேகேசன கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவரின் திருமணம் 2025 ஏப்ரல் மாதம் 16ம் தேதி நடைபெற்றது.
'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் அறிமுகமான கிஷன் தாஸ் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சிதிரா குமாரை 2025 துவக்கத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
2025 பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடிகை பார்வதி நாயர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.
பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், 2025 ஜனவரி மாதம் 2ம் தேதி நவ்நீத் என்பவரை தனது 34வது வயதில் காதல் திருமணம் செய்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களுள் ஒருவர் அறிவு. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'எஞ்சாய் என்சாமி' என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 2025 தொடக்கத்தில், அறிவு அவரது நீண்ட நாள் காதலியான கல்பனாவை கரம் பிடித்தார். இத்திருமணத்தில் சிறப்பு விருந்தினராக தொல்.திருமாவளவன் மற்றும் இளையராஜா கலந்துக் கொண்டனர்.
நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை காதல் திருமணம் செய்துக் கொண்டார். 2025 டிசம்பர் 1ம் தேதி ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக திருமணம் செய்துக் கொண்டார்.
பிக்பாஸ் பிரபலம் ஜூலி, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2025 ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹார்ட் பீட்' இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ராமிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. விமானப் பொறியியல் பட்டதாரியான நடிகர் RG ராம், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆஹா கல்யாணம்' தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் ராமிற்கு, ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.