பெண் வேடத்தில் நடிக்க மறுப்பு , திடீரென்று கதாநாயகனான பாண்டியராஜன்: ஆண்பாவம் படத்தின் ரகசியம்!

வேறொருவருக்காக எழுதப்பட்ட கதாபாத்திரம்… பாண்டியராஜனின் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத திருப்பம்!
Aanpaavam - pandiyaRajan
Aanpaavam - ஆண்பாவம்image credit:Sun NXT
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

தமிழ் சினிமாவின் கிளாசிக் நகைச்சுவை திரைப்படங்களில் பட்டியலில் 'ஆண்பாவம்' படத்திற்கு முதல் ஐந்து இடங்களில் இடம் உண்டு. இந்த திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் 80- களின் காலகட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் ஏராளமான சண்டை காட்சிகள் மிக்க, பழிவாங்கும் கதைக்களத்தை கொண்டதாகவே இருந்தது. அதற்கு மாறாக 'ஆண்பாவம்' திரைப்படம் எந்த ஒரு வன்முறை காட்சிகளும், பழிவாங்கும் கதைக்களமும் இல்லாதது.

படத்தில் இருக்கும் சிறு கதாபாத்திரமும் எளிமையான நகைச்சுவை காட்சிகளுடன், இயல்பான வசனங்களை கொண்டு எடுக்கப்பட்டதால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பாண்டியன் கதாநாயகனாகவும் , பாண்டியராஜன் அவரது தம்பியாகவும் சீதா மற்றும் ரேவதி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்திருந்தனர். மேலும் விகே.ராமசாமி , கொல்லங்குடி கருப்பாயி, ஜனகராஜ் , பூர்ணம் விஸ்வநாதன் , உசிலைமணி, ஓமக்குச்சி நரசிம்மன் உள்ளிட்ட பல குணச்சித்திர நடிகர்களும் நடித்திருந்தனர்.

ஆண்பாவம் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நேரத்தில் , பாண்டியனின் தம்பி கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். கதைப்படி முரட்டு தோற்றம் கொண்ட ஒரு ஜிம் பாய் நடிகர் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த படத்தின் கதையின் படி ஒரு காட்சியில் பாண்டியனின் தம்பி பெண் வேடத்தில் நடிக்க வேண்டியிருந்தது. தனது உருவத்திற்கு பெண் வேடமெல்லாம் சரியாக இருக்காது, என்று அந்த புதிய நடிகர் மறுப்பு தெரிவிக்கவே வேறு ஒரு நடிகரை தேர்வு செய்ய நினைத்தனர்.

பிறகு அந்த இடத்தில் பாண்டியராஜனே நடிக்க ஆரம்பித்தார். முரட்டுத் தோற்றம் கொண்ட தம்பிக்கு பதிலாக ஒல்லியான உருவம் கொண்ட விளையாட்டுத்தனம் மிக்க தம்பியாக பாண்டியராஜன் நடித்தார். அதற்கு முன்னே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த போது ஒரு சில திரைப்படங்களில் அவர் தலை காட்டி இருக்கிறார்.

Aanpaavam
Aanpaavam x

பாண்டியராஜன் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க நடிகை ரேவதியிடம் கால்ஷீட் கேட்டிருந்தார். பாண்டியராஜன் இயக்குனராக அறிமுகமான கன்னி ராசி திரைப்படத்தில் ரேவதி தான் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆயினும் பாண்டியராஜன் உடன் இணைந்து நடிக்க ரேவதி ஆரம்பத்தில் மிகவும் தயங்கியுள்ளார். பிறகு வெறும் 5 நாட்கள் மட்டுமே தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியும் என்று கூற , அந்த 5 நாட்களிலேயே பாண்டியராஜன் அவர் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் படமாக்கி விட்டார்.

இந்தப் படத்தில் எப்போதும் அண்ணன் - தம்பிக்கு இடையேயான சண்டை , இடையில் மூன்றாவது நபர் வந்துவிட்டால் சகோதரர்கள் இணைந்து அவனை வெளுப்பார்கள். இவர்களின் அப்பா வி கே ராமசாமியும் தன் தம்பி ஜனகராஜ் கூட இதே ரகம் தான். வீட்டில் இருக்கும் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே நடக்கும் கேலி கூத்துக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஒரு பஸ் ஸ்டாப் தள்ளி இறங்கியதால் நடைபெறும் குழப்பங்களே படத்தின் கதையாகும்.

இந்த திரைப்படம் வெளிவந்ததும் பாண்டியராஜனின் கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அவரது நகைச்சுவை காட்சிகள் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. துணை கதாநாயகனாக நடித்த பாண்டியராஜன் அந்த படத்தின் கதாநாயகனாகவே நினைக்கும் அளவிற்கு வரவேற்பு பெற்றிருந்தார். ஷோலே படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்த அமிதாப் பிரச்சனை மக்கள் எவ்வாறு கதாநாயகனாக நினைத்தார்களோ? அதேபோல் இந்த திரைப்படத்திலும் நிகழ்ந்தது.

ஆரம்பத்தில் இந்த திரைப்படம் வெற்றி பெறுமா? என்னும் சந்தேகம் பாண்டியராஜனுக்கு இருந்தது. ஆனால், அதை அனைத்தையும் தாண்டி இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 225 நாள் வரை திரையரங்குகளில் ஓடியது. எதார்த்தமாக துணை வேடத்தில் நடித்த பாண்டியராஜன், தான் பெரிய கதாநாயகனாக மாறுவேன் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். ஆனால், ஆண்பாவம் திரைப்படம் கொடுத்த வெற்றியில் நீண்ட காலம் தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
நடிகர் அஜித் செய்த திருட்டு... வைரலாகும் சென்டிமென்ட் ரகசியம்!
Aanpaavam - pandiyaRajan
logo
Kalki Online
kalkionline.com