மகளுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த நடிகர் அர்ஜுன் - இத்தாலி காதலரை மணக்கும் அஞ்சனா

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
actor arjun family
actor arjun family
Published on

80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி ரசிகைகளின் காதல் மன்னனாக திகழ்ந்த நடிகர் அர்ஜுன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு 'ஆக்சன் கிங்' எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இவர் கராத்தே சண்டைக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். கன்னட சினிமா உலகில் அறிமுகமான அர்ஜுன் தமிழில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமையாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன், ரிதம்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ('விடாமுயற்சி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.) அர்ஜுன் கன்னட நடிகையான நிவேதிகா என்பவரை காதலித்து கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அர்ஜூன் மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் டும் டும் டும்... வைரலாகும் போட்டோஸ்!
actor arjun family

மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெயர் சொல்லும்படி அமையவில்லை. இந்நிலையில் இவர், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் சென்னையில் உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவிலில் மிகவும் நெருக்கமான, ஆனால் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

இளைய மகள் அஞ்சனாவுக்கு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு 'ஹேண்ட் பேக்' தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நடிக்க காரணமே இவர் தான்!
actor arjun family

அஞ்சனாவின் நிறுவனத்தில் செய்யப்படும் ஹேண்ட் பேக்குகள் எல்லாம் பழங்களின் தோல்கள் மற்றும் காய்கறிகளின் தோல், நார் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், "கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்" என அஞ்சனா தனது இன்ஸ்டாகிராமில் காதலரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இத்தாலியில் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அஞ்சனாவுக்கு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் அழகான ஐசாயாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், அர்ஜுன் சர்ஜா, நிவேதிதா, ஐஸ்வர்யா, உமாபதி ராமையா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
அர்ஜுன் மகளுக்குத் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமோ?
actor arjun family

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com