நா ரெடி பாடலுக்கு வைப் செய்த மன்சூர் அலிகான்!

நா ரெடி பாடலுக்கு வைப் செய்த மன்சூர் அலிகான்!
Editor 1
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நா ரெடி பாடலை கேட்ட படி நடிகர் மன்சூர் அலிகான் காரை ஓட்டி கொண்டே வைப் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி குவிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி தா வரவா பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் விஜய் குரலில் வெளியான இந்த பாடலை பலரும் ரசிக்கிறார்கள் என்பதில் மாற்று கருத்தே இல்லை. பொதுவாகவே நடிகர் விஜய் அவர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலை பாடுவது வழக்கம். அந்த பாடல் மிக ஹிட் ஆவதும் வாடிக்கையான ஒன்றே. ஜாலியோ ஜிம்கானா, கண்டாங்கி கண்டாங்கி, நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் என பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைப் செய்யப்பட்டு தான் வருகிறது.

அப்படி தற்போது வெளியாகியுள்ள நா ரெடி தா வரவா பாடலும் இளைஞர்கள், குழந்தைகள் என பலரையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் அரசியல் கருத்துக்களை கொண்டுள்ளதா என்று பல்வேறு கோணங்களில் யோசித்தாலும் கூட, பாடல் வைப் பண்ண ஏற்றதாகவுள்ளது.

அப்படி இந்த பாடலை நடிகர் மன்சூர் அலிகான் வைப் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடிகர் மன்சூர் அலிகான் நான் ரெடிதான் வரவா என பாடிகொண்டேயும் உடலை குலுக்கியபடியும் காரை ஓட்டி செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com