யூடியூப்பர் இர்பானுக்கு திருமண அழைப்பிதழ் வைத்த நெப்போலியன்! யாருக்கு திருமணம்?

Irfan - Napoleon
Irfan - Napoleon
Published on

பிரபல யூ டியூபரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளருமான இர்ஃபான் வீட்டுக்கு நேரில் சென்று நடிகர் நெப்போலியன் திருமண அழைப்பு கொடுத்துள்ள நிலையில், ஸ்பெஷல் கிப்ஃட் ஒன்றையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராகவும், அரசியல் வாதியாகவும் அறியப்பட்டவர் நெப்போலியன். இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், மனதுக்கு நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் 2 மகன்களுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன் அங்கு, ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருவதோடு, 3,000 ஏக்கரில் விவசாய பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நெப்போலியன் தீவிர தமிழ் பற்றாளராக இருந்த போதும் இவர், அமெரிக்காவில் சென்று அங்கேயே இருப்பதற்கு முக்கிய காரணம் இவருடைய மகன் தனுஷ் தான். தனுஷ் பிறந்து 5 வயது வரை சாதாரண குழந்தைகள் போல், ஓடி விளையாடுவது என இருந்தாலும். அதன் பின்னர் இவருக்கு ஏற்பட்ட அரியவகை தசை அழிற்சி குறைபாடு நெப்போலியன் குடும்பத்தையே உலுக்கி விட்டது.

தன்னுடைய மகனை அந்த அரிய வகை நோயில் இருந்து மீட்டு கொண்டு வர, நெப்போலியன் பார்க்காத பெரிய பெரிய மருத்துவர்களே இல்லை. ஆனால் ஒரு மூலிகை வைத்தியம் மூலம் தனுஷின் நிலை மேம்பட்டாலும்.. நவீன தொழில் நுட்பத்துடன் சிகிச்சை அளிக்க, அமெரிக்கா சென்றார். தன்னுடைய மகனுக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் நெப்போலியன், தன்னுடைய மகனுக்காகவே 4 லிஃப்ட் வசதியுடன் வீட்டை காட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: டீன்ஸ் - புதுமையும் இல்லை! தழுவலும் இல்லை! மிஞ்சுவது ஏமாற்றமே!
Irfan - Napoleon

தற்போது தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் முடிவு செய்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்து, வீடியோ கால் மூலம், அக்ஷயா என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் திருமண பத்திரிக்கை வைக்கும் பணியிலும் நெப்போலியன் மற்றும் அவரின் மனைவி மும்முரம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், நெப்போலியனின் மகன் தனுஷ் பிரபல யூடியூபர் இர்ஃபானின் தீவிர ரசிகர் ஆவர். இதனால் ஏற்கனவே இர்ஃபானை அமெரிக்கா அழைத்து கௌரவித்த நெப்போலியன், தற்போது இர்ஃபான் வீட்டிற்கு நேரடியாக சென்று திருமண பத்திரிக்கை வைத்துள்ளார். இதனை தன்னுடைய யூடியூப் மூலம் காட்டியுள்ள இர்ஃபான், தனுஷ் - அக்ஷயா திருமணம் ஜப்பானின் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ளத்தையும் உறுதி செய்துள்ளார். திருமண பத்திரிகையுடன் சேர்த்து அனைவருக்கும் வெள்ளி கிண்ணம் ஒன்றையும், நட்ஸ் அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாக நெப்போலியன் குடும்பத்தினர் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com