பிரபல இயக்குனரை திருமணம் செய்யவுள்ள பிரபு மகள்.. யார் தெரியுமா?

பிரபு மகள்
பிரபு மகள்
Published on

டிகர் பிரபுவின் மகளுக்கு பிரபல இயக்குனர் உடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனாவார். 90ஸ் காலத்தில் ஹீரோவாக கலக்கி வந்த இவர், தற்போது அனைத்து அப்பா ரோல்களில் பிட்டாகி உள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் பிரபு அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரை தொடர்ந்து இவரது மகன் விக்ரம் பிரபுவும் படத்தில் நடித்து கலக்கி வருகிறார். கும்கி படத்தில் அறிமுகமான இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். இந்த நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு தான் திருமணம் நடைபெறுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபுவின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணததிற்கு பிறகு ஐஸ்வர்யா, குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதற்கு பின் ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் உடன் தான் வசித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ள, வரும் டிசம்பர் 15ஆம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com