திருமண அப்டேட் கொடுத்த பிரேம்ஜி.. எப்போது தெரியுமா?

பிரேம்ஜி
பிரேம்ஜி
Published on

40 வயதிற்கு மேலாக சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களே இவருக்கு அதிக பெயர் பெற்று தந்தது.

அதாவது வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார். தற்போத் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான கோட் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.

என்னதான் அடுத்தடுத்து சினிமா வாழ்க்கை களைகட்டி வந்தாலும், குடும்ப வாழ்க்கையை மலராமலேயே வைத்திருந்தார்.இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில், புத்தாண்டு வாழ்த்துக்கள், இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமண தேதியை சொல்லுங்க தலைவா என கமெண்ட் தட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com