
நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்று, அதன் பிறகு வெள்ளித்தறையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி, பிறகு மிகப் பெரிய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தற்போது அஜித், விஜய் என பெரிய பெரிய நடிகர்களுடன் படம் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். தற்போது அவர் மீண்டு வந்த நிலையில், அவருடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ரோபோ சங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கருக்கு அவருடைய தாய்மாமாவான கார்த்தி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்தன என்றே சொல்லலாம். இந்திரஜாவின் கணவர் கார்த்திக், தொடர்வோம் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். பிகில் படத்தில் பாண்டியமா கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்ற இந்திரஜா தனது கணவருடன் mr & mrs சின்னத்திரை போட்டியில் பங்கேற்றிருந்தனர். அப்போது இந்திரஜா கர்ப்பமாக உள்ளதை நிகழ்ச்சியின் மேடையிலேயே அறிவித்து இனி போட்டியில் பங்கேற்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அதற்குப் பிறகு தங்களுடைய குழந்தை குறித்து அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதுபோல சமீபத்தில் இந்திராஜாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடைபெற்றது. அப்போது ரோபோ சங்கர் தனக்கு பேரன் தான் பிறக்கப் போகிறான் என்று சொல்லியிருந்தார். அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
கர்ப்பமாக இருந்து வந்த இந்திராஜாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோபோ ஷங்கர் தாத்தாவாகியுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். பேரன் பிறந்த நிலையில், ரோபோ சங்கர் கதாநாயகனாக மாறி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.
ரோபோ சங்கருக்கு மகள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வீட்டிற்கு வந்த ஆண் குழந்தையால் குடும்பத்தினரே மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் என்றே சொல்லலாம்.