நடிகர் ரஜினிகாந்த் தனது பள்ளி நாட்களில் நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர். இப்போதும்தான். ஆனால், அந்த காலத்தில் கமல் ரஜினி படங்களே பெரிய அளவில் ரசிகர்களை பெற்றது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்றவர். இடையில் லிங்கா, கோச்சடையான் போன்ற படங்கள் ரஜினியை ஃபார்ம் அவுட்டாக்கினாலும். அதன்பின்னர், ஜெய்லர் போன்ற படங்கள் மீண்டும் இவர் கம்பேக் கொடுக்க காரணமாயிற்று.
சமீபத்தில் வெளியான வேட்டையன் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ஜெய்லர் 2 படத்தின் ப்ரோமோ வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பெரிய ட்ரீட்டாக அமைந்தது.
அதேபோல் சினிமா ரசிகர்கள் பெரிய அளவு எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவும் பெரிய அளவு வரவேற்பை பெற்றது. எவ்வளவு வயதானாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கே ஆச்சர்யம்தான்.
அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஆச்சார்யா பாடசாலா' குழுமத்தின் நடுநிலைப் பள்ளி, மற்றும் இதே நிர்வாகத்தின் கல்லூரியிலும் படித்தவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த கல்விக் குழுமத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு வரும் 26ம் தேதி நடக்கிறது. இதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ரஜினி வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், மற்றொரு நாள் கண்டிப்பாக வருவதாகவும் குழுமத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
பிரைமரி ஸ்கூல் வரை ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல கன்னட மீடியத்துல படிச்சேன். அப்ப பிரைட் ஸ்டூடன்ட். தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல் எடுத்திட்டிருந்தேன். ஆனா மிடில் ஸ்கூலுக்கு 'ஆச்சார்யா' வந்தப்ப இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்தாங்க. விளைவு ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட்டா இருந்தவன் கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்டாகிட்டேன்.
அதேபோல் இந்த ஸ்கூல் தான் என் நடிப்புக்கு ஒரு வழி தந்தது. நான் பார்த்த படங்களை பள்ளியில் என் நண்பர்கள் முன்னிலையில் நடித்து காட்டுவேன். இது என் ஆசிரியர்களுக்கு தெரிய வர பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நாடக போட்டியில் நடிக்க வைத்தனர். அப்படி நடிக்கும் போது எனக்கு சிறந்த நடிப்பிற்காக விருது கிடைத்தது. அது இப்போது எனக்கு மிகவும் உதவுகிறது.” என்று பேசினார்.