இளைய தளபதி விஜய் சொன்ன ஐந்து குட்டி ஸ்டோரிகள்!

இளைய தளபதி விஜய் சொன்ன  ஐந்து குட்டி ஸ்டோரிகள்!

Life is very short Nanbaa…Always be happy! என்ன நண்பா?

”என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற வார்த்தைகளைக் கேட்காத தமிழ் மக்கள் இருக்கிறார்களா? இந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே ஒவ்வொரு படத்தின் நிகழ்ச்சிக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தொலைக்காட்சி முன் உட்காரும் எத்தனைக்கோடி மக்களின் மந்திர வார்த்தை அது.

“அதபத்தி ஒரு குட்டி ஸ்டோரி” என்று சொல்லும்போது எத்தனை கோடி ரசிகர்களின் உற்சாக சத்தம் காதை கிழிக்கும். அந்த குட்டி ஸ்டோரிகளில் எத்தனை எத்தனை கருத்துகள். உங்களுக்குக் குட்டி ஸ்டோரி கதைகள் எத்தனை தெரியும்? நீங்கள் தளபதி ரசிகர் தானா? என்று வெளியே யாராவது கேட்டால், உடனே ”தம்பி! இத கேளு..” என்று ஒரு குட்டி ஸ்டோரிஸை எடுத்து விடுங்கள்.

தளபதி ரசிகரான உங்களுக்குத்தான் இந்த குட்டி ஸ்டோரிஸ்களின் தொகுப்பு:

குட்டி ஸ்டோரி 1

அதுதான் மன்னர்கள்: சர்கார் இசைவெளியீட்டு விழாவில் தளபதி கூறிய குட்டி ஸ்டோரி!

மன்னர் ஒருவர் தன் படைகளோடு வேறு ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். வழியில் ஓய்வு எடுக்கும்பொழுது உடனிருந்த சிப்பாய் மன்னருக்கு எலுமிச்சைப் பழச்சாறு செய்து கொடுத்தார். அதைச் சுவைத்துப் பார்த்த மன்னருக்கு அதில் உப்பு இல்லை என்று கூறினார். அதற்கு மன்னருடன் இருந்த ஒருவர் சிப்பாயிடம் ”கடைத் தெருவிற்குச் சென்று உப்பு எடுத்துட்டு வா பா” என்று சொன்னார். அதற்கு மன்னர், ”எடுத்துட்டு வரக்கூடாது. பணம் கொடுத்து வாங்கிட்டு வர வேண்டும்” என்றார். உடன் இருந்தவர்” இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டதற்கு அந்த மன்னர் சொன்னார்,”மன்னரா இருக்க நானே பணம் கொடுக்காமல் வாங்கினால், எனக்குப் பின்னாடி வர இந்த சிப்பாய்கள் இந்த ஊரையே கொள்ளை அடிச்சுருவாங்க” என்றார்.

”அதுதான் மன்னர்கள்” என்று கதையை முடித்த தளபதி விஜய் லஞ்ச ஒழிப்பைப் பற்றி அழகாகப் புரியும் விதத்தில் கூறினார்.மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!.

குட்டி ஸ்டோரி 2

”எதிரியா இருந்தாக்கூட மதிக்கனும்”

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹேட்டர்ஸுக்கு குட்டி ஸ்டோரி மூலம் பதிலளித்த தளபதி.

ஒருமுறை எம்.ஜி.ஆர் மற்றும் அவருடைய அமைச்சர் பிரச்சாரத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆரை சந்தோஷப்படுத்துவதற்காக அந்த அமைச்சர் கலைஞரைத் திட்டிக்கொண்டே வந்தாராம். காரை நிறுத்திய எம்.ஜி.ஆர் அந்த அமைச்சரிடம் ”எனக்கும் அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அவர் எவ்ளோ பெரிய தலைவர், எப்படி நீங்க அப்படிப் பேசலாம்” என்று கண்டித்து அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றாராம்.

தளபதி இந்த ஸ்டோரியை முடித்த கையோடு இன்னொரு குட்டி ஸ்டோரியும் சொன்னார்.

அதாவது ஒரு இளைஞன் பூக்கடையில் வேலைப்பார்த்து வந்தானாம். திடீரென்று அந்த வேலையை விட்டுத் தூக்கி விட்டார்கள். அதன்பின் ஒரு வெடிக்கடைக்கு வேலைக்குச் சென்றான். ஆனால் அன்றிலிருந்து வெடி எதுவும் வியாபாரம் ஆகவேயில்லை. ஏனென்று பார்த்தால் பூக்கடையில் பூக்களுக்குத் தண்ணீர் தெளிப்பதுபோல் வெடிக்கு தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தானாம்.

So the moral of the story is….!

யார் யாருக்கு என்ன வேலை என்பதை திறமையின் அடிப்படையில் கொடுத்தால் வேலை நடக்கும் என்பதை நன்றாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குட்டி ஸ்டோரியில் கூறினார் தளபதி விஜய்.

குட்டி ஸ்டோரி 3

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

மாஸ்டர் படத்தில் தளபதி கூறிய நதி குட்டி ஸ்டோரி!

ஒரு நதியில் நிறைய பேர் விளக்கு ஏற்றி தண்ணீரில் விடுவார்கள். நதி ஓடிக்கொண்டே இருக்கும். சிலர் நதியில் பூக்கள் தூவிவிடுவார்கள். நதி அப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதேமாதிரி நம்மை பிடிக்காத சிலபேரும் இருப்பார்கள், எதிர்கிறவர்கள் சிலபேரும் இருப்பார்கள், வரவேற்க சில பேரும் இருப்பார்கள். ஆனால் நம் கடமையை, நம் வேலையை சரியாக செய்துகொண்டு அந்த நதி மாதிரியே ஒடிக்கொண்டே இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
அரசியலுக்கு வருவாரா விஜய்.. அவரே சொன்ன சூசக தகவல்..!
இளைய தளபதி விஜய் சொன்ன  ஐந்து குட்டி ஸ்டோரிகள்!

குட்டி ஸ்டோரி 4!

அழகான அன்பான குட்டி ஸ்டோரி!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய அன்பைப் பற்றிய ஸ்டோரி. ''ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா ,அண்ணன், தங்கை ஆகியோர் இருக்கிறார்கள். அப்பா வீட்டிற்கு வரும்போது குழந்தைகள் இருவருக்கும் சாக்லெட் வாங்கி வருவார். தங்கச்சி அந்த சாக்லெட்டை உடனே சாப்பிட்டுவிடும். ஆனால் அண்ணன் அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பார். ஆனால் அந்த சாக்லெட்டை அந்த தங்கச்சி பாப்பா தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுவிடும். ஒருநாள் அந்த பாப்பா அண்ணனிடம் அன்பு என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த அண்ணன் என்ன சொன்னார் என்றால் ” நீ அந்த சாக்லெட்டை எடுத்துருவன்னு தெரிஞ்சும் தினமும் அதே இடத்துல வைக்கிறான் பாரு உன் அண்ணன், அதுக்குபேர் தான்மா அன்பு” என்று சொன்னார்.இந்த அன்புதான் உலகத்தையே ஜெய்க்கக்கூடிய ஒரு ஆயுதம்! என்று தன் குட்டி ஸ்டோரியை முடித்தார் தளபதி விஜய்.

குட்டி ஸ்டோரி 5

அண்ணே நா ரெடி தான் வரவா?

லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் மக்களின் தளபதி விஜய் கூறிய அடுத்த குட்டி ஸ்டோரி.

இரண்டு பேர் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். ஒருவன் முயலை வேட்டையாடச் சென்று வெற்றியுடன் திரும்பினான். இன்னொருவன் யானையை வேட்டையாடச் சென்று தோல்வியுடன் திரும்பினான். அனைவரும் முயலை வேட்டையாடி வெற்றியோடு திரும்பியவனைத்தான் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். ஆனால் உண்மையில் வெற்றியடைந்தது யானையைத் தனது இலக்காக வைத்தவன்தான் என்று குட்டி ஸ்டோரியை முடித்தார்.

இலக்கு பெரியதாக இருந்து தோல்வியே அடைந்தாலும் அது வெற்றித்தான்!

குட்டி ஸ்டோரிஸின் மூலம் ரசிகர்களை எப்போதும் ஊக்குவித்து உற்சாகத்திலேயே வைத்துக்கொள்ளும் தளபதி விஜய் உண்மையாகவே ”நீங்க வேற லெவலுங்க!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com