GOAT படம் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேரும் விஜய் - சினேகா!

GOAT படம் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேரும் விஜய் - சினேகா!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் ஜோடியாக வசீகரா படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளார். இது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விருது மேடையில் பேசிய சினேகா, முன்னதாக விஜய்யின் ஒரு படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்க தன்னை அணுகியுள்ளதாகவும், அதனை மறுத்துவிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் கோட் படத்தில் சினேகாவின் கதாபாத்திரம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கும் எனவும் கூறியிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com