எம்ஜிஆர் முதல் விஜய் வரை..ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி!

Vijay Political Party
Vijay Political Party

டிகர் விஜய் நேற்று தான் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சினிமா ஹீரோக்களில் தனி கட்சி ஆரம்பித்து மிகப்பெரிய வெற்றிப்பெற்று முதல்வர் ஆனாவர் எம். ஜி. ராமசந்திரன். மக்கள் திலகம் என்று அன்போடு அழைக்கப்பட்ட எம். ஜி. ஆர், 1972 ஆம் ஆண்டு  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 1977 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று முதல்வராக பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.

சிவாஜி: சிறந்த நடிகர்களில் ஒருவராக கொண்டாப்படும் சிவாஜி கணேசன் அவர்கள் 1988ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டெபாசிட் கூட வங்க முடியாமல் தோற்று தனது கட்சியை ஜனதா தளத்துடன் இணைத்தார். 

பாக்யராஜ்: எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்லி வந்த பாக்யராஜ் 1989 ஆம் ஆண்டு கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் தன்னை எம். ஜி. ஆர். வாரிசு என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் ஏற்று கொள்ளவில்லை. அரசியல் இவருக்கு பாடங்களை மற்றுமே கற்று தந்தது. 

T. ராஜேந்திர்: தடலாடி விஷயங்களுக்கு பெயர் போன T. ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அரசியலில் வெற்றி பெற அடுக்கு மொழி வசனங்கள் மற்றும் போதாது என்பதை மக்கள் புரிய வைத்தார்கள். பெரிய கட்சிகளின் சின்னத்திலேயே தேர்தலில் களம் கண்டார் T. R. 

விஜயகாந்த்: 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இரண்டு திராவிட கட்சிளுக்கு மாற்றாக வருவார் என்று எதிர்பார்த்த விஜயகாந்த் அரசியல் சூழ்ச்சியால் வர முடியாமல் போனது.   

கார்த்தி: தான் சார்ந்த சமுதாய ஓட்டுகளை நம்பி நடிகர் கார்த்தி நாடாளும் மக்கள் கட்சியை 2009 ஆம் ஆண்டு துவக்கினார்.இது ஜாதி கட்சியாக இருந்ததால் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச வேட்பாளர்களையும் ஒரு பெரிய கட்சி விலை கொடுத்து வாங்கி விட்டது.             

சரத்குமார்: கார்த்தி போலவே தான் சார்ந்த தென் மாவட்ட சமுதாய மக்களை நம்பி அகில இந்திய சமத்துவ கட்சியை துவக்கினார் சரத் குமார். ஜாதி வேறு அரசியல் வேறு என்று பிரித்து பார்க்க தெரிந்த மக்கள் சுப்ரீம் ஸ்டார்க்கு கை கொடுக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணிக்காக காத்து கொண்டுள்ளார் சரத்.   

கமல்: மக்கள் நீதி மைய்யம்  என்ற கட்சியை 2018 ஆம் ஆண்டு துவங்கினார் கமல். நாடளுமன்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை. நம்மவரை நம்பி மக்கள் ஆதரவு தருவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.             

கருணாஸ்: 2016 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலி படை என்ற ஜாதி கட்சியை தொடங்கினார் கருணாஸ். ஜாதி கட்சி கரை சேராது என்பதை புரிந்து கொண்ட நம்ம லொடுக்கு பாண்டி அதிமுக வின் இரட்டை இலை சின்னத் தில் போட்டியிட்டு சிவகங்கை மாவட்ட த்தில் வெற்றி பெற்று, சட்ட சபைக்கு சென்று அம்மாவின் புகழ் பாடினார். 

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
Vijay Political Party

மன்சூர் அலிகான்: கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் மன்சூர் அலி கான். இப்படி ஒரு கட்சி இருப்பதே மக்களில் பலருக்கு  தெரியாது.                                    எம். ஜி ஆர் என்ற புலியை பார்த்து இங்கே சூடு போட்டு கொண்ட பூனைகள் தான் அதிகம்.  சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் புலியா இல்லை பூனையா என்று காலம் தான் பதில் சொல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com