நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்!

actor vishal and actress lakshmi menon
actor vishal and actress lakshmi menon
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளைப் பற்றி கிசு கிசுக்கள் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இந்த செய்திகள் திருமணத்தை பற்றியதாக  பெரும்பான்மையாக இருக்கும். இந்நிலையில் நடிகர் விஷாலை பற்றி ஊடகங்களில் பல்வேறு கிசுகிசுக்ககள் கடந்த பத்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது.

விஷால் இந்த ஹீரோயினை திருமணம் செய்து கொள்ளப்போகிறார். அந்த ஹீரோயின் விஷாலை திருமணம் செய்ய பச்சைக் கொடி காட்டி விட்டார் இப்படி பல. இதையெல்லாம் கண்டும் காணாதது போல் இருந்த விஷால் இப்போது சில நாட்களாக தனக்கும் நடிகை லக்ஷ்மி மேனனுக்கும் திருமணம் என்ற  செய்திக்கு கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் விஷால், "என்னை பற்றி வரும் வதந்திகளுக்கு நான் எப்போதும் கண்டு கொள்வதில்லை. சிரிப்புடன் கடந்து சென்று விடுவேன். ஆனால் லக்ஷ்மி மேனன் நடிகை என்பதையும் தாண்டி ஒரு பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இது போன்ற தவறான செய்திகள் ஓரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.  பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.

என் திருமணம் என்பது கால நேரம் கூடி வரும் போது கண்டிப்பாக நடக்கும். என் திருமணத்தை முறைப்படி அனைவரிடமும் அறிவித்துவிட்டு தான் செய்து கொள்வேன். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.                                                                                            

logo
Kalki Online
kalkionline.com