ஒரே ஒரு பையன், கலக்கும் இரண்டு நாயகிகள். 'ஹைகூ' இந்த காதல் படம் ஹிட் ஆகுமா?

பெண்கல்லூரியில் நுழைந்த நாயகன் மற்றும் டாக்சிக் காதலில் சிக்கிய நாயகியின் காதல் கதை சொல்விக்கும் விமர்சனம்.
காதல் படம்
காதல் படம்
Updated on: 
ரேட்டிங்க்(2.5 / 5)

காதலியால் கைவிடப்பட்ட நாயகன், சைக்கோக் காதலனின் டாக்சிக் நடவடிக்கைகளால் காதலனைப் பிரிந்த நாயகி இருவருக்கும் ஏற்படும் காதல் கை கூடியதா? இல்லையா?என்பது தான் படத்தின் ஒன் லைன்.

நாயகன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். சக நண்பர்கள் செய்த கலாட்டா சதியால் தவறுதலாக காலேஜில் இருக்கும் லேடீஸ் டாய்லெட்டில் தவறுதலாக நுழைந்து விடுகிறார். இதனால் காலேஜ் நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்கிறது.

வேறு எந்தக் காலேஜிலும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. அப்போது ஒரு லேடீஸ் காலேஜில் அவருக்கு சீட் கிடைக்கிறது. ஆண், பெண் இரு பாலரும் படிக்கும் கோ எட் ஆக அந்த காலேஜ் அந்த வருசம் தான் மாறி இருக்கிறது. அதனால் நாயகன் தான் அந்தக் காலேஜில் இப்போதைக்கு ஒரே ஒரு ஆண்.

அங்கே நாயகனுக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ஈகோ பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிகிறார்கள்.

காலேஜ் படிப்பு முடிந்து நாயகன் ஒரு ஐ டி கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிகிறார். அங்கே நாயகியை சந்திக்கிறார். நாயகிக்கு ஒரு கடந்த காலக்காதல் முதலில் இருந்தது. ஆனால் அவன் டாக்சிக் ஆக டார்ச்சர் செய்பவனாக இருப்பதால் பிரிந்து விட்டார்.

இப்போது நாயகன், நாயகி இருவரும் காதலிக்கிறார்கள். முதல் காதல் அனுபவத்தால் நாயகன் சர்வ ஜாக்கிரதையாக நாயகியிடம் பழகுகிறான். இது நாயகிக்குப் பிடிக்கவில்லை. இயல்பாக இரு என்கிறார்.

சில பிரச்சனைகளால் இருவரும் பிரிகிறார்கள். நாயகி நாயகனின் முன்னாள் காதலியை சந்திக்கிறார்.

இதற்குப்பின் நாயகன் யாருடன் சேர்ந்தார் என்பது க்ளைமாக்ஸ்.

நாயகனாக ஏகன் நடித்திருக்கிறார். கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் அறிமுக நாயகன் இவர். முதல் பாதியில் ஒரு வித நடிப்பு பின் பாதியில் மெச்சூர்டான நடிப்பு என கலக்குகிறார்.

காதல் படம்
காதல் படம்

காலேஜில் படிக்கும் காதலியாக ஸ்ரீதேவி குடும்பப் பாங்கான முகம். நல்ல நடிப்பு. நாயகியாக வரும் பெமினா ஜார்ஜ் அசத்தலான நடிப்பு. மின்னல் முரளி என்ற மெகா ஹிட் மலையாளப் படத்தில் நடித்தவர் இவர்.

அதிர்ச்சி அருண் காமெடி செய்கிறார். ஒரு எமோஷனல் சீக்வன்சும் இவருக்கு உண்டு.

இரு நாயகிகளின் நடிப்பும் நாயகனின் நடிப்பை தூக்கி சாப்பிட்டு விடுகின்றன.

ஒரு பாடலுக்கு மட்டும் பிரிகிடா டான்ஸ் ஆடி இருக்கிறார்.

இசை சித்து குமார். பாடல்கள் ஓக்கே ரகம். பின்னணி இசை கலக்கல் ரகம்.

ஒளிப்பதிவு பிரியேஷ் குருசாமி. இரு நாயகிகளையும் அழகாகக்காட்டி இருக்கிறார்.

அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி காதலர்களுக்கு எமோஷனல் கனெக்ட் கொடுக்கும் விதத்தில் நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

சபாஷ் டைரக்டர்

1. இரு நாயகிகளின் காதல் எதிர்பார்ப்பும் ஒன்று தான். அது காதலன் தனக்கு மரியாதை தர வேண்டும் என்று நினைப்பது. அதை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

2. முதல் காதலில் தோல்வி அடைந்த ஒருவன் தனது இரண்டாவது காதலில் முழுமையாகத்தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் தவிப்பதை சொன்ன விதம் குட்.

3. படத்தின் பின் பாதியில் நாயகனின் கேரக்டர் டிசைன் மாறுவது குட்.

4. இரு நாயகிகளின் லவ் போர்சன்ஸ் ரசிக்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
விஜய் மகனுக்கு செக் வைக்கும் விஜய் சேதுபதி..! - காந்தி ஜெயந்தி ரிலீஸில் ஜெயிக்கப்போவது யாரு..?
காதல் படம்

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஒரு ஆண் என்ற வித்தியாசமான கான்செப்ட் பிரித்விராஜ் நடித்த சாக்லெட்(2007) என்ற மலையாளப் படத்தில் இருந்து உருவி இருக்கிறார்கள்.

2. காட்சிகள் பல மிகவும் நீளம்.10 நிமிடங்கள், 7 நிமிடங்கள், 5 நிமிடங்கள் என நீண்ட காட்சிகள் வருவது போர்.

3. முதல் பாதியில் பல காட்சிகள் யூகிக்க முடியாத அளவில் இருந்தன. ஆனால் பின் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் எளிதில் யூகிக்க முடிகிறது.

4. படத்தின் பெரிய பலம் இசை. பின்னணி இசையில் 96 படத்தில் நமக்குத்தந்த அனுபவத்தை இதுவும் தருகிறது.

5. க்ளைமாக்சை இன்னமும் வித்தியாசமாக சொல்லி இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
'வரதன்' பட ரீமேக்கா அசோக் செல்வனின் புதிய படம் 'அன்பில் அவன்'? தம்பதியின் போராட்டமும் த்ரில்லரும்!
காதல் படம்

ரசித்த வசனங்கள்

1. காதல் ஆரம்பத்தில் சொதப்ப வைக்கும், சொதப்ப சொதப்ப சொல்லிக் கொடுக்கும்

2. ஒரு பொண்ணு நம்மை லவ் பண்ணும்போதே அவங்களை நல்லாப்பார்த்துக்கணும். ஒன்ஸ் அவங்க நம்மை விட்டுப்போகனும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் நாம காலில் விழுந்து கெஞ்சினாலும் வர மாட்டாங்க.

3. காதலில் விட்டுக்கொடுத்தல் முக்கியம், அதே சமயம் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பது காதல் அல்ல.

4. காதல் என்பது ஒருவருக்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்வது அல்ல.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

கல்கி கமெண்ட் - காதலர்களுக்கு நன்றாக கனெக்ட் ஆகும் நல்ல காதல் கதை தான். முதல் பாதி அருமை, பின் பாதி சுமார்.

இந்த காதல் படம் பார்க்கும் போது எவை ஒர்க் அவுட் ஆகியுள்ளன, எவை சறுக்கியுள்ளன என்பதன் தெளிவான மற்றும் வெளிப்படையான அலசல் வாசகர்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com