'வரதன்' பட ரீமேக்கா அசோக் செல்வனின் புதிய படம் 'அன்பில் அவன்'? தம்பதியின் போராட்டமும் த்ரில்லரும்!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த ஜோடியின் ஹோம் ஸ்டே கனவும், 80களின் பாணி வில்லன்களின் சதியும்!
அசோக் செல்வன்
அசோக் செல்வன்
Updated on: 
ரேட்டிங்க்(2.5 / 5)

நாயகன், நாயகி இருவரும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் முடித்து விட்டு ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் பணிபுரிகிறார்கள். இருவருக்கும் லவ். வீட்டில் உள்ளவர்களை எதிர்த்துக் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பணி புரியும் ஹோட்டலில் இருவருக்கும் போதிய மரியாதையும் அங்கீகாரமும் இல்லை. அதனால் நாயகி நெட் பிளிக்ஸ் தயாரிப்பான முஷாபிர் கபே படத்தில் வருவது போல் ஒரு ஹில் ஸ்டேஷனில் சொந்தமாக ஹோம் ஸ்டே ஹோட்டல் கட்ட ஆசைப்படுகிறார்.

அங்கே இங்கே கடன் வாங்கி மலைப்பிரதேசத்தில் இடமும் வாங்கி விடுகிறார் நாயகன். ஹோட்டல் கட்டும் பணி நடக்கிறது.

ஆனால் வில்லன்கள் மூவர் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அந்த ஊர் எம் எல் ஏ, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு வக்கீல் ஆகியோர் தான் வில்லன் க்ரூப் ( 1980 களில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கிய பெரும்பாலான படங்களில் வில்லன் க்ரூப் இந்த பார்மெட்டில் தான் இருக்கும்)

வில்லன்களின் தடையை மீறி நாயகன் வென்றானா? இல்லையா?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக அசோக் செல்வன் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் அழகிய பொம்மை மாதிரி வந்து போகிறார் நல்ல நடிப்பு. சபலிஸ்ட் போலீஸ் வில்லனிடம் மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது எனில் நாயகனுடனான விவாதத்தில் பொறி பறக்கும் நடிப்பு.

டெல்லி கணேஷின் மகன் மகா டெல்லிகணேஷ் போலீஸ்காரராக(இன்ஸ்பெக்டர்) வந்து செய்யும் வில்லத்தனம் அருமை. வில்லன் எம் எல் ஏவாக கதிர் பாலு, வக்கீல் ஆக நடித்த சாபுமோன் நடிப்பும் கச்சிதம்.

ரேவதி ஒரு முக்கியமான ரோலில் கொஞ்ச நேரம் எட்டிப்பார்க்கிறார்.

ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரன் நாயகியையும், லொக்கேஷன்களையும் அழகாகப் படம் பிடித்து இருக்கிறார். ஊட்டி, சென்னை இரண்டும் தான் கதைக்களம் என்பதால் புகுந்து விளையாடி இருக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசை குட். பின்னணி இசையும் கவர்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகள் பொறி பறக்கிறது.

செல்வாவின் எடிட்டிங்கில் முதல் பாதி நல்ல விறுவிறுப்பு. பின் பாதி இழுவை. படத்தின் ரன்னிங்க்.157 நிமிடங்கள்.

இயக்குனர் ஆர் கார்த்திகேயன், விக்னேஷ் ராஜா, அசோக் செல்வன் மூவரும் இணைந்து திரைக்கதை எழுத, விக்னேஷ் ராஜா கதை எழுதி ஆர் கார்த்திகேயன் இயக்கி இருக்கிறார்.

சபாஷ் டைரக்டர்

1. நாயகன் ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் மலை உச்சியில் இருந்து நீர் நிலையில் குதிக்கும் காட்சி பிரமாதம்.

2. நாயகன், நாயகி இருவருக்குமான ரொமாண்டிக் போர்சன் கவிதை. கெமிஸ்ட்ரியும் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

3. இண்ட்டர்வெல் பிளாக்கிற்கு முன்பு வரும் நாயகன் - நாயகி ஆர்க்யூமெண்ட் போர்சன் ரியலிஸ்ட்டிக்காக இருந்தது. ஊடலுக்குப்பின் இவர்கள் மீண்டும் சேரும் காட்சியும் அழகுக்கவிதை.

4. இடைவேளைக்குப்பின் வரும் ஒரு போலீஸ் செக்கப் சீன் செம ஹீரோ பில்டப் சீன். நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

ரசித்த வசனங்கள்

1. சூர்யா, உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா என்ன?

2. அவ என்னை விட வசதி. ஆனா எனக்காக எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு என் கூட ஓடி வந்தா.

3. சொன்னதை மட்டும் செய், அதிகப்பிரசிங்கித்தனம் எதும் செய்ய வேண்டாம்.

4. ஒரு ரெண்டு நிமிசம் நிம்மதியா உக்காந்து அவ கூடப்பேசி எவ்ளோ நாள் ஆகுது தெரியுமா?

5. பிராமிஸ் செஞ்ச வாழ்க்கையை அவளுக்குக் குடுக்கனும்னு நான் ஆசைப்படறேன்.

6. இந்த சம்பவம் நடக்கும்போது மேடம் வீட்டில் தனியாவா இருந்தீங்க?

7. இன்னைக்கு நைட் எதிர்பாராத சம்பவம் நடந்து போயிடுச்சு. அதில் எனக்கும் வருத்தம் தான்.

8. தனியா இருக்கத்தான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.

9. சார் ரொம்ப சாப்ட் டைப் போல.

10 நீ என்ன செஞ்சே? நான் என்ன செய்யறேன் என்று கணக்குப்போட்டு வாழ்வது இல்லை வாழ்க்கை.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி - சாய் நடித்துள்ள 'பத்தா' விமர்சனம்: பயம் கலந்த சிரிப்பு விருந்து!
அசோக் செல்வன்

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. The Siege Of Trencher's Farm என்ற நாவல் கார்டன் எம் வில்லியம்சால் எழுதப்பட்ட நாவலைத்தழுவி 1971ல் எடுக்கப்பட்ட Straw Dogs ஹாலிவுட் படத்தின் அபிசியல் ரீமேக்காக பகத் பாசில் நடிப்பில் 2018ல் வரதன் என்ற மலையாளப்படம் வந்தது. அந்தப்படத்தின் பட்டி டிங்கரிங் அன் அபிசியல் அட்லீ வெர்சன் தான் இது. டைட்டிலில் மேலே கூறிய மூவருக்கும் க்ரெடிட் தரவில்லை.

2. படத்தின் கடைசி 45 நிமிடங்கள் ஆக்சன் சீக்வன்ஸ் தான். போர் அடிக்கிறது. ஊரில் இருக்கும் அத்தனை ரவுடிகளையும் நாயகன் ஒற்றை ஆளாக சமாளிப்பது இவர் ஜாக்கிசானா? புரூஸ்லியா?vஎனக்கேட்க வைக்கிறது.

3. முதல் பாதியில் இருந்த சுவராஸ்யம் பின் பாதியில் இல்லை.

இதையும் படியுங்கள்:
விஜய் மகனுக்கு செக் வைக்கும் விஜய் சேதுபதி..! - காந்தி ஜெயந்தி ரிலீஸில் ஜெயிக்கப்போவது யாரு..?
அசோக் செல்வன்

4 வில்லனான போலீஸ் இன்ஸ்பெக்ட்டரின் சல்லாப லீலைகள் கொண்ட காட்சிகள், க்ளிப்பிங்க்ஸ் நாயகனுக்குக் கிடைத்தும் நாயகன் அதைப் பயன்படுத்தவே இல்லை. மீடியாவிலோ அவரது யூ ட்யூபிலோ அப்டேட் பண்ணி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஓவர் வன்முறைக்காக 16+.லிப் லாக் சீன் உண்டு. நாயகன், நாயகி நெருக்கமான காட்சியும் உண்டு.

கல்கி கமெண்ட் - பகத் பாசில் நடித்த வரதன் படத்தைப் பார்க்காதவர்கள் பார்க்கலாம். முதல் பாதி காதல் கதை ,பின் பாதி அதிரடி ஆக்சன் கதை.

பிரமாண்டமான மலைப்பிரதேச பின்னணியில் காதல் மற்றும் ஆக்சன் கலந்த த்ரில்லர் அனுபவத்தை விரும்புபவர்களுக்கான முழுமையான திரைக்கதை அலசல்.

logo
Kalki Online
kalkionline.com