நடிகர் அஜித்தின் கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நலமாக இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
நடிகர் அஜித் தற்போது அதிக படங்கள் நடிப்பதைத் தவிர்த்துவிட்டு, கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் ஒருபக்கம் அரசியலில் நுழைய, அஜித் மறுபக்கம் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். சினிமாவின் பொறுப்பை அடுத்த தலைமுறை நடிகர்களிடம் ஒப்படைத்தைபோல் இருவரும் சினிமாவை விட்டு படிபடியாக விலகுகிறார்கள்.
இப்படியான நிலையில், வெகு நாட்கள் தள்ளிப்போன விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்தது. ஆனால், மீண்டும் படம் வெளியீடு தள்ளிப்போவதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிருப்தி அடையவைத்திருக்கிறது.
மேலும், தமிழ் புத்தாண்டுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பதை ரிலீஸ் தேதியுடன் அறிவித்து அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
அதேபோல் அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன்னதாக விடாமுயற்சி படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டுகையில் விபத்து ஏற்பட்ட வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
தற்போது மீண்டும் விபத்தில் சிக்கிய காட்சி பார்ப்போரை பதைப்பதைக்க வைக்கிறது. தற்போது துபாயில் அஜித் ஓட்டிச் சென்ற கார் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
ஆனால், இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் இன்றி தப்பித்துவிட்டார். மேலும் இதுபோன்ற கார் ரேஸில் இதெல்லாம் சகஜம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழு அவரை பத்திரமாக மீட்டுள்ளது.
இதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அஜித் 10ம் தேதி தொடங்கும் கார் ரேஸில் நிச்சயம் கலந்துக்கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.