பறவைக் காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் பலி.. எங்கு தெரியுமா?

Birds fever
Birds fever
Published on

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 65 முதியவர் ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மிச்சிகனில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்பவருக்கும், அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஒரு முட்டை உற்பத்தியாளருக்கும் பறவைக் காய்ச்சல் H5N1 ஏற்பட்ட நிலையில் வேகமாகப் பரவி வந்தது. இதனையடுத்து நிபுணர்கள் இது கோவிட்டை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடிய காய்ச்சல் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த H5N1 வைரஸ் முதன்முதலில் 1996ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 18 மனிதர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் பரவும்போது அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படாது. ஆனால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு நேரடியாகப் பரவும்போது கடுமையானப் பாதிப்பாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்… பள்ளிகளுக்கு விடுமுறை!
Birds fever

2003ம் முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒவ்வொரு நூறு பேரில் 52 பேர் இந்த பறவைக் காய்ச்சலுக்குப் பலியாகிவுள்ளனர். அதேபோல் பாதிப்படைந்த 887ல் 462 பேர் பலியாகினர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் உயிரிழப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

முன்னதாகவே நிபுணர்கள் இந்தக் காய்ச்சல் கோவிட்டை விட உலகளவில் 100 மடங்கு மேகமாகப் பரவும் தன்மையுடையது என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறியிருந்தனர்.

இப்படியான நிலை இந்த வருடம் மீண்டும் பறவைக் காய்ச்சல் அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
ஜானகி கொடுத்த சூடாமணியும் அனுமன் கொண்ட மமதையும்!
Birds fever

இந்த தொற்று கடுமையாக இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்டுப்பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தவிர, வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என லூசியானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபக்காலமாக பல இடங்களில் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கூட HMPV வைரஸ் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்கள் மாஸ்க் அணிந்துக்கொண்டு பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com