
சினிமாவில் மற்ற நடிகர்களை விட வித்தியாசமானவர் நடிகர் அஜித். தனக்கு என்ன தோன்றுகிறதா எதை பற்றியும் கவலைப்படாமல் அதை செய்யும் துணிச்சல் இவரிடம் மட்டுமே உண்டு. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்தான பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் ஜெயித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அஜித் சினிமா மட்டுமின்றி கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் வெற்றி பெற்று உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். கலைத்துறையில் இவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் பத்மபூஷன் விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது.
அஜித் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதும் இல்லை. பேட்டி கொடுப்பதும் இல்லை. இதை தனது வாழ்க்கையில் ஒரு பாலிசியாகவே வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக அஜித்குமார் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது குறித்து பார்க்கலாம் வாங்க...
தனிப்பட்ட முறையில் தனக்கு அரசியலில் எந்தவொரு ஆசையும் இல்லை என்று கூறிய அஜித், எனது சக நடிகர்கள் (விஜய்) அரசியலில் குதித்துள்ளது என்பது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம். 100% இந்த முடிவை எடுக்க பெரிய தைரியம் வேண்டும். நான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அத்துடன் ஜனநாயகத்தின் சிறப்பம்சம், மக்கள் தங்கள் தலைமையை தாங்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான். எனவே, எனது சக நடிகர்கள் மட்டுமின்றி... அரசியல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பி அரசியலில் இறங்கும் அனைவரும் வெல்ல வேண்டும் என்பதே விருப்பமாகும்.
பத்மபூஷன் விருது பெற்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. இந்த விருதை பெற ஜனாதிபதி மாளிகைக்கு நான் சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பைப் பார்க்கும் போது, தலைவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சுமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அது உண்மையாகவே ஒரு கடினமான வேலை. நாட்டின் அல்லது மாநிலத்தின் பொறுப்பை உங்கள் தோள்களில் சுமப்பது மிகப் பெரியது என்று கூறினார்.
நான் அரசியலுக்கு வரப்போவதாக பேசுகிறார்கள். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பால் தான் இருந்துள்ளேன். எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பேசும்போது கூட அரசியல் குறித்துப் பேசமாட்டேன். இது தெளிவாக நானே எடுத்த முடிவுதான். வரும் காலத்திலும் அது அப்படியே இருக்கும். மாநில அரசியலாக இருந்தாலும், தேசிய அரசியலாக இருந்தாலும் எனது நட்பு வட்டாரத்திலேயே அது குறித்து சீக்கிரம் பேச மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் அரசியலுக்கு எப்போதுமே NO தான் என்று அஜித் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை ரசிகர்கள் இணைத்தில் வைரலாக்கி வருகின்றனர்.