

ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, வினோதினி, செந்தில் குமாரி இவர்கள் நடிப்பில் மைதீன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளிவந்துள்ள படம் ஆல்பாஸ்.
ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா இன்னும் சில நண்பர்கள் அனைவரும் ஒரு காலனியில் வசிக்கிறார்கள். இவர்களின் குடும்பமும் ஒருவருக்கு ஒருவர் அன்னோன்யம் ஆகவும், நட்பாகவும் இருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகள் ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஐந்து கோடி ரூபாயை திருடிக் கொண்டு வருகிறார்கள். திருடிக் கொண்டு வந்ததுக்கு பிறகு தான் தெரிகிறது இது ஆளுங்கட்சி எம்எல்ஏவின் பணம் என்று. எம் எல் ஏ தன்னிடம் விசுவாசமாக இருக்கும் கவுன்சிலரை வைத்து இந்த பணத்தை தேட சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் இந்த பணம் கவுன்சிலர் இருக்கும் காலனியில் தான் இருக்கிறது என்று புரிந்து கொண்டு காலனிக்கே வந்து தங்குகிறார். ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா மற்ற நண்பர்களின் குடும்பத்திற்கு இது ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு. ஒரு கட்டத்தில் பங்கு பிரிப்பதில் தகராறும் ஏற்படுகிறது. எம்எல்ஏ தீவிரமாக பணத்தை தேடி வருகிறார். இறுதியில் என்ன ஆனது என்று சொல்கிறது இந்த படம்.
கதை சபாஷ்… வன்முறை, ஆபாசம் என்று கதைகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு சிறிய ஒன் லைனை வைத்து குடும்பப் பின்னணியில் ஒரு கதை சொன்னதற்காக இந்த படத்தை பாராட்டலாம். படம் எடுத்துக் கொண்ட கதையை விட்டு எங்கேயும் விலகி செல்லாமல் இருந்தது ஒரு பிளஸ் பாயிண்ட்..
திரைக்கதை ஓகே... படத்தின் முதல் பாதி திரைக்கதை மிகவும் சாதாரணமாக தான் இருக்கிறது. பெரிய ட்விஸ்ட்டுகள் எதுவும் இல்லை ஆனால் இரண்டாம் பாதி குறிப்பாக இன்டெர்வல் பிளாக்கில் இருந்து படம் வேகமாக சூடு பிடிக்கிறது.
ஒரு வீட்டில் எம் எல் ஏ கதவை தட்டும் இடத்தில் கட் செய்துவிட்டு இன்னொரு இடத்தை காட்டும் இடம் எடிட்டிங் மற்றும் திரைக்கதையில் ஒரு நல்ல டிவிஸ்ட்டாக இருக்கிறது. எப்படியும் மாட்டிக் கொள்வார்கள் என்று நினைக்கும் இடத்தில் சில குழப்பத்தால் எம் எல் ஏ விடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கும் இடம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
இசை...நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் எதுவும் பெரிதும் கேட்கும்படி இல்லை. ஆனால் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. ஒரு குடும்பப் பின்னணி கலையை ஒரு திரில்லர் பாணிக்கு முயற்சி சென்றிருப்பது ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை முக்கிய காரணம்.
நடிப்பு...அடிப்படையில் கன்னட நடிகரான சரத் லோகிசபா நடிப்பு மிரட்டலாக உள்ளது. ஒரு மோசமான எம்எல்ஏவாக ஒரு சரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரத் ஜெயபிரகாஷ் ஒரு பொறுமையான தந்தையாக தன் நடிப்பை தந்துள்ளார். டைரக்டர் சுப்ரமணிய சிவா ஒரு குடிகார அப்பாவாக வந்து சிறிது நகைச்சுவையும் செய்கிறார். பெண்கள் கதாபாத்திரத்தில் வினோதினி மனதில் நிற்கிறார். நமது வீடுகளில் இருக்கும் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதோ அதே மனநிலையில் நன்றாக நடித்துள்ளார் வினோதினி.
இறுதியாக...படத்தில் ஆங்காங்கே சில குறைகள் உள்ளது. இருந்தாலும் மற்றவர்கள் பணத்திற்கு ஆசைப்படுவது என்பது தவறானது என்று சொல்வதற்கு இன்று ஒரு படம் கூட இல்லை. கடத்தல், திருட்டு போன்றவற்றை நியாயப்படுத்தும் கதைகள் தான் இன்று சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றன. இதை முறியடிக்கும் விதமாகவும் நியாய சிந்தனை கொண்டும் இந்த ஆல் பாஸ் படம் வந்திருப்பதால் ஒரு திரைக்கதையிலும், எடுத்துக் கொண்ட கருத்திலும் இந்த படம் பாஸ் செய்து விடுகிறது. பெரிய ஆர்பாட்டம் இல்லாமல் பெரிய நடிகர்கள் இல்லாமல் ஒரு எளிமையான கதையில் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு ஆல் பாஸ் படத்தில் பார்க்கும்போது உங்களுக்கு கிடைக்கலாம்.
பிறர் பணத்திற்கு ஆசைப்படுவது தவறு என்ற நல்ல கருத்தை, வன்முறையின்றி ஒரு குடும்பப் பின்னணி த்ரில்லராகக் கொடுத்திருக்கும் 'ஆல் பாஸ்' திரைப்படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்களை வாசகர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வார்கள்.