பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!

கல்விக்காகத் துடிக்கும் ஒரு சிறுமியின் மனதை உலுக்கும் யதார்த்தமான பயணமே இந்தத் திரைப்படம்.
பெண் கல்வி
பெண் கல்வி
Updated on
அருள்வான்(2.5 / 5)

பெண் கல்வி வலியுறுத்தும் கதைக் கரு

யக்குனர் கணேஷ் வினாயகத்தின் பிலிமோகிராபி வித்தியாசமானது. முதல் படமான தகறாரு (2013) அருள் நிதி+ பூர்ணா நடிப்பில் வெளி வந்த மிஸ்ட்ரி டிராமா பிலிம். அவரது இரண்டாவது படம்  வீர சிவாஜி (2016) விக்ரம் பிரபு - ஷாமிலி நடிப்பில் வெளி வந்த  ஆக்சன் திரில்லர். மூன்றாவது படம் தேன் (2021) தருண் குமார் + அபர்நதி நடிப்பில் வந்த மெலோ டிராமா. மூன்று படங்களும் கமர்சியலாக மெகா ஹிட் படங்கள் கிடையாது.ஆனால் இயக்குநருக்கு  நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்த படஙகள்.

இவரது நான்காவது படம் மூன்றாவது படமான தேன் போலவே மலை கிராம மக்களின் வாழ்வை சொல்லும் மெலோ டிராமாதான். வழக்கமான கமர்சியல் அம்சங்களான பாட்டு, டூயட், காமெடி இதில் இருக்காது. வித்தியாசமான படம் பார்ப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

பூங்கொடி என்று ஒரு கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் இடம். படிப்பறிவு இல்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் படிப்பு என்று ஒன்று இருக்கு பள்ளியில் படிப்பு சொல்லித் தருவார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. சாலை  வசதிகள் இல்லை. அவர்கள் தனி மொழி பேசுவார்கள். அவர்கள் பேசும் மொழி நமக்குப் புரியாது. நாம் பேசும் தமிழ் அவர்களுக்குப் புரியாது.

இந்தக் கதையின் நாயகி ஒரு சிறுமி. சிறுமியின் அம்மா, அப்பா இருவரும் அவள் மேல் அன்பைப்பொழிகிறார்கள்.சிறுமிக்கு ஒரு தாத்தா உண்டு. இங்கே ஒரு போலீஸ் ஆபீசர் இருக்கிறான். அவன் தான் வில்லன். டூரிஸ்ட்களுக்கு சாதகமாக சில செயல்கள் செய்பவன்.

வனத்தில் ஒரு மான் சுடப்படு வீழ்ந்து கிடக்கிறது. இதை சுட்டது நீயா? என வில்லன் சிறுமியின் தாத்தாவிடம் கேட்கிறான். இல்லை என்று அவர் கூற அப்போ ஸ்டேஷன் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக்கொடுத்து விட்டுப்போ என்கிறான்.

எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என தாத்தா சொல்ல ஒரு பேப்பரில் கை நாட்டு வாங்கிக் கொள்கிறான் வில்லன். தாத்தாவுக்கு இருக்கும். நில புலன்களை வஞ்சகமாக வில்லன் தன் வசப்படுத்தி விடுகிறான். உண்மை புரியாத மக்கள் தாத்தாவை ஏளனனாகப் பேச தாத்தா சிறுமியிடம் சொல்கிறார். எனக்குக் கல்வி அறிவு இல்லாததால் தான் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் அது போல் இருந்து விடாதே. எப்பாடு பட்டாவது படி என்கிறார். நாயகியான சிறுமியின் மனதில் அது நன்றாகப் பதிந்து விடுகிறது. அம்மா, அப்பாவிடம் படிப்பில் சேர்த்து விடு பள்ளிக்கு அனுப்பு என்று அடம் பிடிக்கிறாள்.

பெண் கல்வி
பெண் கல்வி

பள்ளிக்குப்போக வேண்டும் எனில் 12 கி.மீ பயணிக்க வேண்டும். கலெக்டரிடம் மனு கொடுத்தால் இங்கேயே பள்ளியை உருவாக்குவார்கள் என்று சொல்ல கலெக்டரிடம் மனு கொடுக்கிறாள்.

இந்த சமயத்தில் சிறுமி 13 வயது ஆன நிலையில் பூப்பெய்தி விடுகிறாள். சம்பிரதாயப்படி பூப்படைந்த பெண்கள் சில காலம் வெளியே போகக்கூடாது. திருமணம் செய்து வைக்கும் பேச்சு போகிறது. இது நாயகிக்குப் பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவை விட்டு அந்த மலை கிராமத்தை விட்டுத் தப்பிக்கிறாள்.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை நாயகியாக சிறுமி கிருத்திகா பிரமாதமாக நடித்திருக்கிறார். மொத்தப்படத்தையும் தாங்கி நிற்கிறார். ஒரு சீனில் தானும் அழுது ஆடியன்ஸ் அனைவரையும் அழ வைக்கிறார். இந்த வருசத்துக்கான சிறந்த குழந்தை நட்சத்திர விருது நிச்சயம்.

நாயகியின் அம்மா, அப்பாவாக ரம்யா பாண்டியன் - ஆரவ் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை காதலித்துப்பின் ஏமாற்றியதாக ஆரவ் மீது ஒரு வில்லன் இமேஜ் உண்டு. இந்தப்படத்தில் அதை உடைத்து நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வந்திருக்கிறார். அம்மாவாக வரும் ரம்யா பாண்டியனும் அழகாக வந்து போகிறார். மகள் மீது பாசம் வைக்கும் செண்ட்டிமெண்ட் சீன்ஸ் பெண்களைக் கவரும்.

கலெக்டராக வரும் அருள்நிதி அடக்கி வாசித்திருக்கிறார். அமைதியான நடிப்பு. ஹீரோயிசம், பில்டப் சீன் எதுவும் இல்லாமல் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

சிறுமியின் தாத்தாவாக நடித்தவரின் நடிப்பு அருமை. வில்லனாக வரும் ஜான் விஜய் ஓவர் ஆக்டிங்காக நடிப்பதைத் தன் கொள்கையாகவே வைத்திருக்கிறார். எரிச்சல் ஊட்டும் நடிப்பு. நிருபராக வரும் காளி வெங்கட், அரசு ஊழியராக வரும் விடிவி கணேஷ், ஊர்த்தலைவராக வரும் அருள்தாஸ் மூவரும் யதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சுகுமார். தேனி மாவட்டத்தில் கதை நடப்பதால் தேனியின் வசீகர அழகை, வனத்தின் அழகை அட்டகாசமாகப்படமாக்கி இருக்கிறார். படத்தின் உயிர் நாடி ஒளிப்பதிவும், லொக்கேஷனும். இசை ஜி வி பிரகாஷ் குமார். பாடல்களுக்கான இசை பின்னணி இசை இரண்டும் இதம். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கணேஷ் வினாயகம்.

இதையும் படியுங்கள்:
20 வருடக் குற்ற உணர்ச்சி: ரோஷன் மேத்யூவின் க்ரைம் த்ரில்லர் படம் 'உயிர் (2026)' எப்படி இருக்கிறது?
பெண் கல்வி

சபாஷ் டைரக்டர்

1. பெண் கல்வி, பெண் முன்னேற்றத்தை வலியுறுத்தும் அருமையான கதைக்கரு.

2. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் நம்பகத்தன்மை.

3. சிறுமியின் மொழிப்பிரச்சனைக்காக கலெக்டராக வரும் அருள் நிதி சொல்லும் தீர்வு.

4. பிரமாதமான ஒளிப்பதிவு, கண்ணைக்கவரும் லொக்கேஷன்.

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. போஸ்டர் டிசைனில், புரோமஷனில் அருள்நிதி தான் ஹீரோ என்பது போல் விளம்பரம் செய்யப்பட்டது. பின்னடைவு. இடைவேளைக்குப்பின் தான் சில காட்சிகளில் வருகிறார்.

2.  கல்விக்கான கதையில் காமராஜர் ரெப்ரன்ஸ் இல்லை. ஏமாற்றம்.

3. படம் முழுக்க சிறுமி பேசும் காடர் மொழி புரியவில்லை. சப் டைட்டில் தமிழில் போட்டிருக்கலாம்.

4. படத்தின் ஓப்பனிங்கில் எல்லோருக்கும் புரிவதற்காக காடர் மொழியில் பேசுவதை தமிழ் மொழியில் பேசுவதாகக்காட்டி இருக்கிறோம் என்று டைட்டில் போடுகிறார்கள். ஆனால் சிறுமி மட்டும் காடர் மொழியில் பேசுகிறார்.

5. தனது 13ம் வயது வரை ஏ பி சி டி கூடப்படிக்காத சிறுமி க்ளைமாக்சில் கலெக்டர் ஆவதெல்லாம ஓவர். நம்பகத்தன்மை இல்லை. 6. இதை ஒரு டாக்குமெண்ட் ரி டிராமாவாக எடுக்கலாமா?கமர்ஷியல் படமாக எடுக்கலாமா? என்ற குழப்பம் இயக்குநரிடம் தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ஒரு போதையா? தேசிய விளையாட்டு எது? அதிரடி வசனங்களால் அதிரவைக்கும் புதிய படம் 'அங்கீகாரம்'!
பெண் கல்வி

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+  க்ளீன் யு கல்கி கமெண்ட் -  அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல கதைக்கருதான். ஆனால் அனைவராலும் பொறுமையாகப் பார்த்து விட முடியாது என்பது தான் துயரம். ரேட்டிங். 2.5 /5 இந்தப் பதிவைப் படிப்பதன் மூலம், ஒரு சாதாரண சமூகப் பிரச்சனை எவ்வாறு கலைத்துவமான திரைப்படமாக உருமாறுகிறது என்பதையும், வணிக ரீதியான எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஒரு படைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com