

நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது. இதற்கு முன்னர் மலையாள திரைப்படங்கள் செய்திருந்த அத்தனை பாக்ஸ் ஆபிஸையும் இந்த திரைப்படம் உடைத்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமா செய்திருந்த அத்தனை வசூல் சாதனைகளையும், முறியடித்திருந்த நிவின் பாலி , மீண்டும் ஒருமுறை மலையாள சினிமாவின் உச்சத்தை தொட்டுள்ளார்.
பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தை 'பிரேமலு' திரைப்படத்தை இயக்கிய கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கிறார். பிரேமலு திரைப்படம் தெனிந்திய முழுக்க நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் குவித்திருந்தது. அந்த இயக்குனர் மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்.
பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தில் நிவின் பாலியுடன் மமிதா பைஜு, வினய் ஃபோர்ட், பிந்து பணிக்கர், ஷ்யாம் மோகன் மற்றும் ஸ்ரிந்தா ஆகியோரும் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. மற்ற மொழிகளை விட மலையாள மொழியில் இந்த திரைப்படம் வசூலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அயர்லாந்தில் கல்லூரி படிப்பை முடித்து கேரளா திரும்பவும் ஆஷ்லி , பக்கத்து வீட்டில் நடைபெறும் திருமணத்தில் தனது பழைய காதலை நினைவு கூர்கிறாள். பெத்லகேம் குடும்ப யூனிட்டில் உள்ள ஜஸ்டின் என்ற 30 வயதைக் கடந்த வாலிபர் மீது ஆஷ்லிக்கு காதல் வந்துள்ளது. இருவருக்கும் இடையில் வயது வித்தியாசம் இருந்தாலும் இந்த காதல் கதை , நகைச்சுவை , சோகம் என அனைத்தையும் கடந்து சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது.
பெத்லகேம் குடும்ப யூனிட் இந்தியாவில் மட்டும் இதுவரை ₹173.40 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்தப் படத்தின் மொத்த வெளிநாட்டு வசூல் ₹135 கோடியாக உள்ளது. மொத்தமாக இந்த திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ₹ 308.40 கோடி என்ற சாதனை அளவை எட்டியது. 25-வது நாளில், இந்த திரைப்படம் இந்தியாவில் நிகர வசூலாக ₹2.10 கோடியை வசூலித்தது. இதன் மூலம் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் இந்திய மொத்த நிகர வசூல் ₹148.50 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகளாவிய வசூலில் வரலாறு படைத்த இந்த திரைப்படம், வசூலில் தற்போது முந்தைய நாளை விட 54.3% சரிவைப் கண்டுள்ளது. 25 வது நாளில் வெளிநாடுகளில் இந்த திரைப்படம் ₹0.50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதன் முதன்மையான மலையாளப் பதிப்பு அன்றைய வசூலில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிசில் இந்தத் திரைப்படம் ₹1.75 கோடியை ஈட்டியது. இதன் தெலுங்குப் பதிப்பு ₹22 லட்சத்தையும், தமிழ்ப் பதிப்பு ₹13 லட்சத்தையும் ஈட்டின.
தற்போது பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்பட வசூல் குறைந்து வந்தாலும் , அது மலையாள சினிமாவில், எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்னர் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா: சாப்டர் 1' திரைப்படம் ₹301.50 கோடி வசூலித்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.