ரஜினியைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்: கிண்டலா அல்லது மாஸ் வாழ்த்தா? இணையத்தில் தீயாய் பரவும் ட்வீட்!

ஜெயிலர் 2 வெற்றி குறித்து அல்லு அர்ஜுன் பதிவிட்ட வைரல் பதிவின் பின்னணி என்ன? முழு விபரம்!
Allu Arjun Rajini
Allu Arjun tweets
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் 2 திரைப்படத்தை பற்றி பதிவிட்ட டிவிட்டானாது இன்று நாடு முழுக்க வைரலாகியுள்ளது. அவரது பாராட்டு செய்தியினை பெரும்பாலானவர்கள் சிலாகித்து செய்தியாக வெளியிட்டுள்ளனர். அதே நேரம் சமூக வலைதளங்களில் ஒரு சிலர், அல்லு அர்ஜுன் கருத்துக்களை வேறு மாதிரியாக திரித்தும் பதிவிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் திரையுலக காலத்தில் திரையில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். ரஜினி காந்த் தலைமுறை இளம் நடிகர்கள் திரையுலகில் முன்னேறும் போது , அவருக்கு முந்தைய தலைமுறையினர் தமிழ் சினிமாவில் துணை வேடங்களுக்கு மாறிக்கொண்டனர்.ரஜினிகாந்த் தொடர்ந்து கமலுடன் போட்டி போட்டு தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார்.

அவருக்கு அடுத்த தலைமுறையில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் திரையில் அறிமுகமாகி ஏராளமான இளைஞர்களை கவர்ந்தனர். ஆனால், அந்த காலகட்டத்திலும் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்தார். ரஜினியின் தலைமுறை நடிகர் பலரும் துணைக் கதாபாத்திரங்கள் , கதாநாயகன், கதாநாயகியின் அப்பா வேடம் , குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.

ரஜினிகாந்த் மட்டும் 75 வயதை தொட்டும் இன்றுவரை கதாநாயகனாகவே தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயிலர் -2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றி ரஜினிகாந்த் மேலும் மகிழ்ச்சி ஆக்கியுள்ளது. கமல் உள்ளிட்ட திரைத் துறையை சேர்ந்த பல நடிகர்களும் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். உலகளவில் ₹600 கோடி வசூலை ஜெயிலர் 2 திரைப்படம் நெருங்கிவிட்டது. இதை, தெலுங்கு சினிமா உலகின் பான் இந்தியா நடிகரான அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளது அதிக கவனம் பெற்று வருகிறது. புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தின் மூலமாக தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற நடிகராக அல்லு அர்ஜுன் மாறினார். அவரது X பதிவில் ,

Rajini allu arjun
Rajini allu arjun Allu Arjun

"இது ஒரு உண்மையான ரஜினி சாரின் காட்சி பெட்டகம், அவரது நட்சத்திர அந்தஸ்து, ஆரா மற்றும் ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்! விறுவிறுப்பான அட்ரினலினை பம்ப் செய்யக் கூடிய, ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர்!

சகோதரர் அனிருத் கொன்றுவிட்டார் (இசையால்)! படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் என அனைவரும் தங்கள் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளனர். ஷோமேன் நெல்சன், மிகச் சிறந்ததொரு வெற்றிப் படத்தை அதிரடியாகக் கொடுத்துள்ளார்!

சட்டை கூட கலையாமல், 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளக்கூடிய ஒரே நபர் ரஜினிதான்! 🖤

முழு குழுவினருக்கும் வாழ்த்துகள்! @sunpictures " என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது சட்டை கூட களையாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்று விட்டார் என்று அல்லு அர்ஜுன் பாராட்டி இருந்தார். ஒரு சிலரோ அல்லு அர்ஜுன் பாராட்டினாரா? அல்லது ரஜினியை கிண்டல் செய்தாரா? என்றும் செய்திகளை பதிவிட்டுள்ளனர். தற்போது அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் ராக்கா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் , சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com