'அங்காரகன்' - டெரர் போலீஸ் அதிகாரி சத்யராஜ்!

நடிகை நியா
நடிகை நியா

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. இவர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். சினிமாவின் மீது - குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

இந்தப் படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இந்தப் படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை நியா
நடிகை நியா

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்புச் செய்த கருந்தேள் ராஜேஷ் இந்தப் படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்தப் படம் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது எனக் கூறுகிறார் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் S.கிறிஸ்டி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com