‘அரசன்’ படத்திலிருந்து அதிரடியாக விலகிய அனிருத்! வெற்றிமாறன் உடனான மோதல் தான் காரணமா?

தீபாவளி ப்ரோமோ சர்ச்சைக்கு நடுவே சிம்பு ரசிகர்களுக்கு மற்றொரு பேரிடி; பின்னணியில் நடந்தது என்ன?
Arasan
vetrimaaran aniruth instagram
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

சிம்பு ரசிகர்கள் தீபாவளியை முன்னிட்டு, தங்களை உற்சாகப் படுத்த சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் சிறப்பு ப்ரோமோ காட்சியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல் அரசனின் சிறப்பு ப்ரோமோ காட்சி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த காட்சியையும் இசையையும் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ப்ரோமோ காட்சியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். திரைப்படத்தின் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் படத்திலிருந்து வெளியேறினார், என்ற செய்தி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் தனுஷின் ஆஸ்தான இயக்குநரான வெற்றிமாறன், சிலம்பரசனை வைத்து படம் இயக்குவதாக அறிவித்த போதே ஏராளமான சர்ச்சைகள் கிளம்பியது. அரசன் திரைப்படத்தின் திரைக்கதையும் தனுஷ் நடிப்பில் வெளியான 'வடசென்னை' திரைப்படத்தின் யுனிவர்சில் இணைந்த கதை என்றும் கூறப்பட்டது. தனுஷ் நடித்த கதையில் சிம்பு நடிப்பதால் அதன் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், சிம்பு இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டதாக முதலில் தகவல்கள் பரவி வந்தது. பின்னர் அரசன் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவியது. ஆனால் , அந்த திரைப்படம் கைவிடப்படவில்லை என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஏராளமான பிரச்சனைகள் படத்தை சுற்றி வந்தாலும் , அடுத்தடுத்த சிக்கல்கள் மேலும் திரைப்படத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் அரசன் ப்ரோமோவில் இடம்பெற்றிருந்த ‘ஃபயரு ஃபயரு’ பாடல், இணையத்தில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது அரசன் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத், திரைப்படத்திலிருந்து விலகியுள்ளதாக பிரபல யூடியூப் சேனலான ‘வலைப்பேச்சு’ தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் சிம்பு , அனிருத், வெற்றிமாறன் ஆகியோர் முதல்முறையாக இணைந்தது தான்.

இவர்களின் முதல் கூட்டணி படத்தின் இசை மற்றும் சிம்புவின் காட்சிகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை தகர்க்கும் விதமாக அனிருத் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். இதற்கு காரணமாக அனிருத் தனது திருமண நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதாலும் , கிரீஸில் நடைபெற்ற அவரது திருமணக் கொண்டாட்டம் காரணமாகவும், இந்த திரைப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டது.

simbu vetrimaran
Arasan simbuChennai City news

மேலும் படத்தின் ​இயக்குநர் வெற்றிமாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, இந்த விலகலுக்குக் காரணம் என வலைப்பேச்சு சேனல் குறிப்பிட்டுள்ளது. வெற்றிமாறன் எப்போதும் ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பிலேயே தனது திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்தக் கூட்டணியில் வெளிவந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், வெற்றிமாறன் எதிர்பார்த்த காலகட்டத்திற்குள் அனிருத் பாடல்களை முடித்துக் கொடுக்காததால், இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆயினும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இருவரையும் சமாதானப்படுத்த பெருமுயற்சி எடுத்துள்ளார் , ஆயினும் இருவரும் அதற்கு உடன்பட வில்லை. இதற்கு இன்னொரு காரணமாக, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜன் வகையறா’ படத்திற்கு இசையமைப்பாளரக சாய் அப்யங்கரை ஒப்பந்தம் செய்தது , அனிருத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.