Anomie movie
Anomie movieimage source:timesnow

அனோமி (2026) - சினிமா விமர்சனம்..! ஒரே பேட்டர்ன்.. 4 மரணங்கள்! – 11 வருட ரகசியத்தை உடைத்த போலீஸ் அதிகாரி..!

Published on
ரேட்டிங்(3 / 5)

கடந்த 06.02.2026 அன்று கேரளாவில் ரிலீஸ் ஆன இந்தப்படம், இப்போது தமிழ் டப்பிங்கில் தமிழக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.அனோமி என்ற சொல்லுக்கு தனிமையில் இருத்தல், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நெறிமுறை அற்ற சமூக நிலை என்று அர்த்தம்.லோ பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாட்களில் 48 லட்சம் ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.

கதைச் சுருக்கம் (SPOILER ALERT):

நாயகி (பாவனா) ஒரு தடயவியல் நிபுணர்.இவருக்கு ஒரு தம்பி உண்டு.நாயகியின் பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறக்கிறார்கள். அந்த விபத்துக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வு நாயகியின் தம்பிக்கு இருக்கிறது.தற்கொலைக்கு முயல்கிறான்.நாயகி அவனைக்காப்பாற்றிப் பேணி பாதுகாக்கிறார்

நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர் அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஒரு காதல் ஜோடியில் ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட இன்னொருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள அவர்களை பாதுக்காக்க முடியாமல் போய் விட்டதே என்ற மன வருத்தத்தில் இருக்கிறார்.டியூட்டியில் கவனம் இல்லாமல் ஏனோ தானோ என்று இருப்பவரை உயர் அதிகாரி கண்டித்து தற்கொலை போல் ஜோடிக்கப்பட்ட இருவழக்குகளை அவர் வசம் தந்து விசாரணை செய்யச்சொல்கிறார்.

நாயகியின் தம்பி தற்கொலை செய்து கொள்கிறார்.ஆனால் அது கொலை என நாயகி சந்தேகிக்கிறார்.நாயகியே அந்தக்கேஸை டீல் செய்கிறார்.நாயகனிடம் இப்போது மூன்றாவதாக நாயகியின் தம்பி கொலை கேஸ் சேர்கிறது.அவர் ஒரு பக்கம் விசாரிக்கிறார்

நாயகிக்கு ஒரு காதலன் உண்டு.அவன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான்.ஆனால் இந்த பேட்டர்ன் வேறு மாதிரி இருக்கிறது.

மற்ற மூன்று கேஸ்களும் கொலை செய்து தற்கொலை போல ஜோடிக்கப்பட்டவை.நாயகியின் காதலன் கொலை தற்கொலை போல ஜோடிக்கப்படாமல் இருப்பது.இந்த நான்கு கேஸ்களிலும் உள்ள ஒரே ஒற்றுமை நான்கு பேருமே மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றவர்கள் தான்.இந்தக்கேஸில் இருக்கும் மர்மத்தை நாயகன் கண்டுபிடிப்பதுதான் மீதி திரைக்கதை.

நாயகியாக பாவனா.இது இவரது சொந்தப்படம்.தயாரிப்பாளர் என்பதால் போட்ட காசு திரும்ப வருமோ ? வராதோ ? என்ற மன வருத்தத்தில் இருந்தார் போல , படம் முழுக்க டல் முகமாகவே வருகிறார்.அது அந்த கேரக்ட்டருக்கு வலு சேர்க்கிறது.அவரது ஆடை வடிவமைப்பும் அருமை.

நாயகன் ஆக ரகுமான் என்கிற ரகு,போலீஸ் ஆபீசரின் கம்பீரம்,மிடுக்கு அந்த உடல் மொழி எல்லாம் பிரமாதம்.நாயகியுடன் வரும் மோதல் காட்சியில் கச்சிதமான நடிப்பு.நாயகியின் தம்பி ஆக வரும் ஷெபின்,நாயகியின் காதலன் ஆக வரும் அர்ஜூன் (ஆக்சன் கிங்க் அர்ஜூன் அல்ல) இருவரும் குறைவான நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பு.

முக்கியக்கேரக்டர்கள் போக அந்த டாக்டர் கேரக்டர் ,போலீஸ் அதிகாரி கேரக்டர் இருவரது கதாப்பாத்திர வடிவமைப்பும் அருமை.

ஹர்சவர்தன் தான் இசை.இவரது பின்னணி இசை படம் முழுக்க ஒரு டெம்ப்போவை ஏற்றுகிறது.ஒளிப்பதிவு சுஜித்சாரங்க்.நாயகியின் க்ளோசப் ஷாட்களைக்கையாண்ட விதம் அருமை.ரியாஸ் மராத் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

சபாஷ் டைரக்டர் (பிளஸ் பாயிண்ட்ஸ்):

1.சீரியல் கில்லர் கதை போலத் தொடங்கி, கிளைமாக்ஸில் 'மெடிக்கல் க்ரைம் திரில்லராக' மாற்றிய விதம் அருமை.

2.நாயகன்-நாயகி இடையே தேவையில்லாத காதல், டூயட் எனத் திசைமாறாமல் கதை சொன்ன விதம் சிறப்பு.

3.11 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலைக்கும், தற்போதைய கொலைகளுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கும் 'ட்விஸ்ட்' செம

4.டைட்டிலில் வரும் அனோமி - த ஈக்வேசன் ஆப் டெத் என்ற வாசகத்துக்கு மெனக்கெட்டு. விளக்கம் சொல்ல இயக்குநர் உபயோகித்த ஐடியா பிரமாதம்.

5.கொலையாளி யார் என்பதில் வரும் ஒரு ட்விஸ்ட் ,நாயகியின் காதலனைக்கொன்ற நபர் பற்றிய ட்விஸ்ட் (இருவரும் வேறு வேறு) அட்டகாசம்.

6.மரணம் பற்றிய ஆராய்ச்சி,ஒருவர் இறந்த பின்பும் மூளை கொஞ்ச நேரம் செயல்படும் என்ற தகவல் இவை எல்லாம் இதுவரை சொல்லப்படாதவை.

7.வில்லனுக்கான ஓப்பனிங்க் சீன்,கேரக்டர் டிசைன் அருமை.

நெருடல்கள் (மைனஸ் பாயிண்ட்ஸ்):

1.தற்கொலை என காட்டப்படும் மரணங்களில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உடலில் ஒரு வித கெமிக்கல் கலந்திருப்பதாக வருகிறது.கொலைகாரன் இதை யூகிக்கவில்லையா?

2.படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் மன நலன் பாதிக்கப்பட்டவராக ,சோக முகஙகளாகவே வருவது பின்னடைவு.யார் முகத்திலும் சந்தோஷமே இல்லை.பாசிட்டிவ் வைப் இல்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 16+ (முதிர்ந்தவர்களுக்கு மட்டும்)

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு நல்ல விருந்து. தாராளமாகப் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3 / 5

இதையும் படியுங்கள்:
MADE IN KOREA (2026) - தமிழ் - சினிமா விமர்சனம்..! இது 'குவீன்' படத்தின் காப்பியா? பிளஸ் மற்றும் மைனஸ் அலசல்!
Anomie movie
logo
Kalki Online
kalkionline.com