‘அப்பா குட்டி’ விமர்சனம்: வளர்த்த மகளுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் அந்த முடிவு என்ன?

ஸ்டெம் செல் சிகிச்சை, நீதிமன்றப் போராட்டம், எமோஷனல் கிளைமாக்ஸ் — படம் எப்படி இருக்கு?
அப்பா குட்டி
அப்பா குட்டி
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங் (3 / 5)

விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து, எடிட்டிங் பணியும் மேற்கொண்டு வந்துள்ள படம் அப்பா குட்டி. இப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். படத்தின் இயக்குனர் மு.மாறன் (இவர் நமது கல்கி பத்திரிகையில் உதவி ஆசிரியராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர்)அப்பா குட்டி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். 

விஜய் ஆண்டனி ஊட்டியில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள். மகளின் பெயர் தியா. விஜய் ஆண்டனிக்கு மனைவி இல்லை. தியா படிக்கும் பள்ளியின் ஆசிரியராக இருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி விஜய் ஆண்டனியை காதலிக்கிறார். ஆனால் விஜய் ஆண்டனிக்கு இந்த காதலில் விருப்பமில்லை. ஒருநாள் தியா உடல் நிலை சரியில்லாமல் போகிறார்.

அப்போது சோதிக்கும் மருத்துவர்கள் உடல்நிலை சரியாக தியாவின் அப்பாவும், அம்மாவும் இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டு அந்த குழந்தையின் மூலமாக ஸ்டெம் செல்லை எடுத்து தியாவிற்கு வைத்தால் தியா குணமாக வாய்ப்புள்ளது என்கிறார். ஆனால் அப்போது நான் ஒரு உண்மையை பிரீத்தி அஸ்ரானியிடம் சொல்கிறார் விஜய் ஆண்டனி. தனக்கு குழந்தைகளே இல்லை திருமணமே ஆகவில்லை என்ற அதிர்ச்சியான விஷயத்தை சொல்கிறார். தியா அவள் வளர்த்த குழந்தை என்று சொல்கிறார்.

அப்போது உண்மையான பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் உண்மையான பெற்றோர்களை தேடி கண்டுபிடிக்கிறார். ஆனால் உண்மையான பெற்றோர்கள் தங்களது ஸ்டெம் செல்லை கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் பல சங்கடங்களை மேற்கொண்டு நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் ஆண்டனி. முடிவில் என்ன ஆனது என்று சொல்கிறது இந்த படம். 

இந்த படம் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கற்பனையாக புனையப்பட்ட கதை. இப்படி ஒரு ஸ்டெம் சிகிச்சை என்ற ஒரு ஒன் லைனை வைத்து படம் எடுத்ததற்காக இயக்குனர் மாறனை நாம் பாராட்டலாம். படத்தின் முதல் அரை மணி நேர அல்லது ஒரு மணி நேர காட்சிகள் சாதாரணமாகத்தான் நகர்கின்றது. இன்ட்ரவல் பிளாக் பிறகு படம் வேறொரு திசையில் பயணிக்கிறது. அதாவது படத்தில் உண்மையான பிரச்சனையான ஸ்டெம் செல் என்ற விஷயத்தை எமோஷனலுடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர். இந்த எமோஷனல் மிக நன்றாகவே கைகொடுத்துள்ளது. 

அப்பா குட்டி
அப்பா குட்டி

பெற்றோர்களின் கௌரவம், ஈகோ இதெல்லாம் குழந்தைகளின் விஷயத்தில் எவ்வாறு குழந்தைகளை பாதிக்கின்றன என்று டைரக்டர் சொல்லியுள்ளார். படத்தில் இருக்கும் நீதிமன்ற காட்சிகள் உண்மையாகவே மிகவும் பாராட்டும்படியாக இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் சற்று தெய்வத்திருமகள் காட்சியை நினைவுபடுத்தும் படி இருக்கிறது. கிளைமாக்ஸ் செண்டிமெண்டாக விஜய் ஆண்டனி ஒரு விஷயத்தை செய்வது திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓரளவு நல்ல கதையில் இருக்கிறார் விஜய் ஆண்டனி என்று தைரியமாக சொல்லலாம். இடைப்பட்ட காலத்தில் ஆக்சன் சென்று மறுபடியும் எமோஷனலாக கதையை கையில் எடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் படத்தில் அம்மா சென்டிமென்ட் கை கொடுத்தது போல இப்படத்தில் மகள், அம்மா மற்றும் அப்பா கை கொடுத்து இருக்கிறது. விஜய் ஆண்டனி ஒரு தரமான நடிப்பை தந்துள்ளார்.

தான் வளர்த்த மகளுக்காக மகளைப் பெற்ற பெற்றோர்களிடம் கதறி அழும் இடம் சிறப்பாக இருக்கிறது. ப்ரீத்தி அஸ்ராணி அமைதியாக நடித்திருக்கிறார். தியாவின் அம்மாவாக வரும் ஹரிப்பிரியா இசை நல்லதொரு நடிப்பை தந்திருக்கிறார். சிறுமி தியாவாக நடிக்கும் லிதன்யா சரியான தேர்வு. இவரது நடிப்பு நம் வீட்டில் இருக்கும் ஒரு பெண் குழந்தையை நினைவு படுத்துகிறது.

விஜய் ஆண்டனி பின்னனி இசையில் ஒரு அவரேஜ் லெவல்லிலும் பாடல்களில் மிகச் சிறப்பாகவும் இசையமைத்திருக்கிறார். அப்பாவை நினைத்து வரும் பாடல் ஒன்று மிகவும் நன்றாக இருக்கிறது. மகள்களுக்கு அப்பாவின் பங்கு என்ன என்பதை அந்த பாடல் நமக்கு சொல்கிறது. படத்தின் பாடலாசிரியர்கள் ஏகாதாசி மற்றும் அருண் பாரதி இருவரும் பாடல்களை உணர்ந்து எழுதி உள்ளார்கள். 

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ஒரு போதையா? தேசிய விளையாட்டு எது? அதிரடி வசனங்களால் அதிரவைக்கும் புதிய படம் 'அங்கீகாரம்'!
அப்பா குட்டி

படத்தின் எடிட்டிங் விஜய் ஆண்டனி பொறுப்பேற்றுள்ளார். சரியான இடத்தில் படத்தை தொகுத்ததால் படம் ரசிக்கும் படி இருக்கிறது. இப்படத்தில் ஒரு சில மைனஸ் உள்ளன. அதாவது படத்தில் ஆரம்பத்தில் காட்சிகள் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. இதை இன்னும் சிறப்பாக இயக்குனர் செய்திருக்கலாம். படத்தில் பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம் ஜென்சன் செய்யும் சில காமெடிகள். இது ஓரளவு கை கொடுத்திருக்கிறது. படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது ஒரு ஃபீல் குட் டச் ஆக இருக்கிறது.

மறுபடியும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சரியான கதையில் அதாவது தனக்கு பொருத்தமான ஒரு கதையில் விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்து மக்களை ஈர்த்திருக்கிறார். இந்த படத்தை நீங்கள் பார்க்கும் போது அப்பா மகள் உறவு பற்றி வேறு ஒரு பார்வை உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
மணிரத்னம் படத்தின் ரகசிய கதை இதுதானா? ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா புதிய படம்!
அப்பா குட்டி

மேலும் வாடகை தாய் என்ற மருத்துவ விஷயம் தற்போது நம் நாட்டில் பரவலாக பேசப்படுகிறது. அதே சமயத்தில் சில சட்ட சிக்கல்கள் இதில் உள்ளது. அதேபோல் ஸ்டெம் செல் என்ற விஷயம் எதிர்காலத்தில் இந்தியாவில் முக்கிய மருத்துவ தேவைகளாக இருக்கலாம் என்பதையும் இந்த படம் பேசியுள்ளது காலத்தின் தேவையே.

அப்பா-மகள் பாசம், ஸ்டெம் செல் சிகிச்சையின் உணர்ச்சிப் போராட்டம் மற்றும் விஜய் ஆண்டனியின் எமோஷனல் கம்பேக் எந்த அளவுக்கு கைகொடுத்துள்ளது என்ற தெளிவான மதிப்பீட்டை வாசகர்கள் பெறுவார்கள்.