அட்லீ தனது உதவி இயக்குநர்களுக்கு சொந்த ஃபிளாட் வாங்கித் தந்ததாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் அட்லீ சங்கரின் துணை இயக்குநராகப் பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெரிய பெரிய நடிகை நடிகர்களை வைத்து எடுத்தார். இரண்டாவது படமே விஜய் வைத்து தெறி படம் இயக்கினார். இதுவும் பெரிய ஹிட் கொடுத்தது.
தொடர்ந்து விஜய் வைத்து மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். இவரின் தெறி படம் தற்போது பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை அட்லீதான் தயாரித்திருக்கிறார். இதற்கு முன்னர் இரண்டு தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அட்லியும் இந்த ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
விஜய் சேதுபதி படத்தை தான் இயக்கவிருப்பதாக அட்லீ தெரிவித்திருக்கிறார். அதேபோல் கமல் ஹாசன் மற்றும் சல்மான் கான் இருவரையும் வைத்து புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இப்படியான நிலையில், அட்லீ குறித்தான சுவாரஸ்ய விஷயம் ஒன்று கசிந்துள்ளது.
இயக்குநர் அட்லீ தனது உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் சொந்தமாக ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார். "தான் சம்பாரித்தால் மட்டுமே போதும் என இருக்கும் இந்த திரையுலகில், தன்னுடன் வேலைப் பார்த்த உதவி இயக்குனர்களுக்கு ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ" என அவர் கூறியுள்ளார்.
அட்லீ சில படங்களை மட்டுமே இயக்கி அதன்மூலம் பாலிவுட் படத்தையே தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். இத்தனை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக அவரின் துணை இயக்குநர்களும் காரணமாக இருப்பார்கள். ஆகையால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய விஷயத்தை அட்லீ செய்திருக்க வேண்டும். எது எப்படியோ… இவ்வளவு பெரிய விஷயம் செய்வதற்கே முதலில் ஒரு நல்ல எண்ணம் வேண்டுமே.