சத்துமிகுந்த முளைக்கீரையின் முக்கியத்துவம் தெரியுமா உங்களுக்கு?

Importance of Spinach
Healthy recipes
Published on

கீரைகளில் முளைக்கீரை தனித்துவமானது. இதில் 80%நீர்ச்சத்து உள்ளது. இது தவிர நார்ச்சத்து, மாவுச்சத்து குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் உடல் வலுவடைய இந்த கீரை பெரிதும் உதவுகிறது. வளரும் சிறுவர், சிறுமியருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலை உறுதியாக்குகிறது.

கீரையில் உள்ள இரும்புச்சத்து, மற்றும் தாமிரச்சத்துக்கள் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரையுடன் அதிமதுரம் ஒரு துண்டு, மஞ்சள் மூன்று சிட்டிகை மூன்றையும் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகிவிடும்.

முளைக்கீரையுடன்  சீரகத்தை நெய்யில் வறுத்து சேர்த்து மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை மட்டும் எடுத்து சாதத்துடன் கலந்து சாப்பிட, அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும். முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சமஅளவு எடுத்து சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பௌத்திரகட்டி, ரத்தமூலம் போன்றவை சரியாகும்.

முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சி வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்து சாப்பிட பசியின்மை போகும். நல்ல பசி உண்டாகும். புளிச்சகீரை, மிளகு, மஞ்சள், உப்பு மற்றும் அதனுடன் முளைக்கீரையை சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். ருசியின்மை குறைபாடு நீங்கி பசியைத் தூண்டும்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் நூல்கோல் குருமா-சிகப்பு கீரை கடையல் செய்யலாம் வாங்க!
Importance of Spinach

முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் உடலுக்கு தேவையான அளவு கிடைத்துவிடும். தொடர்ந்து பிள்ளைகளுக்கு கொடுத்து வர நல்ல உயரமாக வளர்வார்கள்.

முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தேவைக்கு இந்தப் பொடியை உணவில் சேர்த்துக்கொள்ள பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும். காசநோயால் ஏற்படும் காய்ச்சலை போக்கக்கூடியது.

இதையும் படியுங்கள்:
காய்கறிகள் - பழங்களை சத்து குறையாமல் பயன்படுத்த வேண்டுமா?
Importance of Spinach

சிறுபருப்புடன் முளைக்கீரையை சமைத்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும். முளைக்கீரை சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பரு, தேமல், போன்றவை மறைந்து முகப்பொலிவு கூடும்.

சொறி, சிரங்கு போன்றவை முளைக்கீரையை சாப்பிட குணமாகும். வெப்பத்தினால் ஏற்படும் ஜூரத்தை போக்குகிறது. முளைக்கீரை சாறில் உளுந்தை ஊற வைத்து சாப்பிட நீர்க்கடுப்பு மறையும்.

இவ்வாறு பல நன்மைகள் கொண்ட முளைக்கீரையை உணவில் சேர்த்து உண்போம். ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com