ஆனந்த் ராதிகா தம்பதியினருக்கு அட்லீ அளித்த பரிசு… பாலிவுட் உலகமே ஷாக்!

Atlee in ambani function
Atlee in ambani function
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

மிகவும் பிரம்மாண்டமாக நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணத்தில் கலந்துக்கொண்ட அட்லீ, அந்த தம்பதியினருக்கு ஒரு சூப்பர் பரிசு கொடுத்துள்ளார். அந்த பரிசைப் பார்த்து திரையுலகமே ஷாக் ஆனது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் கடந்த ஜூலை 12 முதல் 14 வரை கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஹாலிவுட் பிரபலம் முதல் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் வரை கலந்துக்கொண்டு அசத்தினர்.

மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு அம்பானி குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 9000 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

ஆனந்த் ராதிகா திருமணத்தில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்துக்கொண்டார். அட்லீ மனைவி பிரியா, Anand's Brigade என்ற வார்த்தைப் போட்ட உடை அணிந்திருந்தார். அதுவே கோலிவுட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. ஏனெனில், ஒரு படம் பாலிவுட்டில் ஹிட் கொடுத்தப்பின், அப்படியே பாலிவுட்டிற்கு ஜால்ரா போடுவது போல் நடந்துக்கொள்கிறார்கள் என்று தமிழ் ரசிகர்கள் பேசத்தொடங்கினர்.

இவர் செய்வதைப் பார்த்து பாலிவுட்டிலேயே இனி இவர் படம் எடுக்கப்போகிறார் என்றும், தென்னிந்திய பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை!
Atlee in ambani function

இப்படியான சூழ்நிலையில்தான், இவர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவிற்கு அளித்த பரிசு பற்றிய தகவல் வந்து கோலிவுட் ரசிகர்களை மட்டுமல்ல பாலிவுட் ரசிகர்களையும் பேச வைத்திருக்கிறது. ஜூலை 12ம் தேதி திருமணத்திற்கு முன்னதாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் போல் அனிமேட் செய்யப்பட்ட ஒரு குட்டி அனிமேஷன் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த 10 நிமிட குறும்படத்தை எடுத்தவர் அட்லீ. இதுபோன்ற பரிசை யாருமே அளிக்கவில்லை. எந்த பாலிவுட் இயக்குநரும் இதுபோல் பரிசுகளை கொடுத்து அவர்களுக்கு ஐஸ் வைக்கவில்லை.

எது எப்படியோ! இப்போது இந்த குறும்படத்தில் அப்படி என்ன இருக்கும் என்பதே இந்திய மக்களின் கேள்வியாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com