உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்களுக்கு அடுத்த மிகப்பெரிய விருந்து ‘Avengers: Doomsday’. படம் வெளியாக இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், அதன் டிக்கெட் முன்பதிவு ஏற்கெனவே சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பதிவு வேகம் தொடர்ந்தால், வெளியீட்டு வார இறுதியில் வரலாற்று சாதனையாக ஒரு பில்லியன் டாலர் வசூலை எட்டும் வாய்ப்பு இருப்பதாக தொழில்துறை கணிப்புகள் வெளியாகியுள்ளன.
Marvel Studios-ன் இந்தப் படம் 2026 டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. Robert Downey Jr. இம்முறை Iron Man ஆக அல்லாமல், முக்கிய வில்லனான Doctor Doom ஆக நடிக்கிறார். Chris Evans உள்ளிட்ட பழைய Marvel நட்சத்திரங்களின் வருகையும், Avengers, Fantastic Four மற்றும் X-Men கதாபாத்திரங்கள் ஒரே கதைக்களத்தில் சந்திப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
Marvel வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களிலும் இந்த பிரம்மாண்ட கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 18 அன்று வெளியான பல சர்வதேச ஊடக அறிக்கைகள், Avengers: Doomsday படத்தின் advance ticket sales சுமார் 100 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.950 கோடி) எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளன. Outlook, Times of India உள்ளிட்ட ஊடகங்களும் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், ஆரம்பகட்ட முன்பதிவு வேகம் Spider-Man: Brand New Day படத்தை விட முன்னிலையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டிக்கெட்டுகள் வழக்கமான வெளியீட்டு காலத்துக்கு மிகவும் முன்பாக விற்பனைக்கு வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனால், ரசிகர்களின் ஆரம்ப ஆர்வத்தை வைத்து பல்வேறு box-office tracking நிறுவனங்கள் எதிர்கால வசூலை கணிக்கத் தொடங்கியுள்ளன.
சில அறிக்கைகளின்படி, முதல் இரண்டு நாட்களின் முன்பதிவு வேகம் Spider-Man: Brand New Day படத்தின் அதே காலகட்டத்தை விட சுமார் 65 சதவீதம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே பில்லியன் டாலர் opening குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் முன்பதிவு எண்ணிக்கையும் இறுதி வசூலும் ஒன்றல்ல என்பதால், இந்த கணிப்பை எச்சரிக்கையுடன் அணுகுவது அவசியம். ரசிகர்களின் ஆர்வம் வெளியீட்டுக்குப் பிறகும் தொடருமா, விமர்சனங்கள் எப்படி அமையும், Dune: Part Three உடனான போட்டி எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மையான வசூலை தீர்மானிக்கும்.எனவே இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாகும்.
மேலும், Avengers: Doomsday வெளியாகும் அதே டிசம்பர் 18 அன்று Denis Villeneuve இயக்கும் Dune: Part Three படமும் வெளியாகிறது. எனவே, இந்த இரண்டு பிரம்மாண்ட படங்களுக்கும் இடையிலான போட்டி, 2026-ம் ஆண்டின் மிகப்பெரிய box-office நிகழ்வுகளில் ஒன்றாக அமையலாம்.
இந்த முன்பதிவு வேகத்தின் பின்னணியில் Marvel ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் Marvel படங்களின் வசூலில் ஏற்ற இறக்கங்கள் இருந்த நிலையில் Avengers பெயரே மீண்டும் மிகப் பெரிய திரையரங்கு கூட்டத்தை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
2019ல் வெளியான Avengers: Endgame உலகம் முழுவதும் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திஇருந்தது.. அதன் பின்னர் Avengers கதாபாத்திரங்கள் மீண்டும் ஒரே படத்தில் பிரம்மாண்டமாக இணைவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்..
மேலும் Robert Downey Jr..Doctor Doom கதாபாத்திரத்தில் தோன்றுவது படத்தின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக உள்ளது..Iron Man கதாபாத்திரத்துடன் அவருக்கு இருக்கும் நீண்ட கால ரசிகர் தொடர்பு புதிய வில்லன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது..
Chris Evans உள்ளிட்ட பிரபல Marvel நட்சத்திரங்களின் பங்கேற்பும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசு பொருளாக உள்ளது..அதே நேரத்தில் இந்த $100 மில்லியன் முன்பதிவு எண்ணிக்கையை இறுதி வசூலாக கருத முடியாது.. படம் வெளியாகும் வரை முன் பதிவு வேகம் மாறக் கூடும்.. வெளியீட்டிற்கு பிறகு ரசிகர்களின் விமர்சனங்கள் படத்தின் தரம் மற்றும் போட்டியாக வெளியாகும் Dune : Part Three ஆகியவை உண்மையான வசூலைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.. எனவே தற்போது வெளியாகி உள்ள புள்ளி விவரங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை காட்டுகின்றன.. இறுதி சாதனையை உறுதி செய்யவில்லை..
அவரது கார்ட்டூன்களில் நகைச்சுவையுடன் சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளும் பிரதிபலித்தன.. அரசியல் நிகழ்வுகளை சாமானிய மக்களின் பார்வையில் வெளிப்படுத்திய விதம் அவரை தனித்துவமான கலைஞராக உயர்த்தியது.. அதனால் அவரது படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தை மட்டும் அல்லாமல் இந்திய சமூகத்தின் பல்வேறு மாற்றங்களையும் பதிவு செய்த வரலாற்றுச் சுவடுகளாகவும் இன்றும் பார்க்கப்படுகிறது..
முன்பதிவிலேயே இப்படியொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Avengers: Doomsday, உண்மையிலேயே ஒரு பில்லியன் டாலர் opening-ஐ எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் Marvel-ன் பழைய பிரபல முகங்களும் புதிய கதாபாத்திரங்களும் இணையும் இந்தப் படம், உலக சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்கெனவே உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.