பூமிக்கு வரும் ஏலியன்.. மக்கள் படும் பாடு.. வெளியானது அயலான் ட்ரைலர்!

அயலான் ட்ரைலர்
அயலான் ட்ரைலர்
Updated on

அயலான் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலியனுடன் சிவகார்த்திகேயன் படம் நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த ட்ரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பேசில் இருந்து பூமிக்கு வரும் ஏலியனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று இந்த படத்தில் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இது ஒரு சிறந்த எண்டெர்டெயின்மெண்ட் ஆகும் என தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com