'Baby bump' போட்டோஷூட்: இணையத்தை தெறிக்க விட்ட நடிகை ராதிகா ஆப்தே!

Radhika apte
Radhika apte
Published on

நடிகை ராதிகா ஆப்தே தனது 39-வது வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது கர்ப்பகாலத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

இவர் BFI லண்டன் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் தனது 'baby bump'ஐ வெளிப்படுத்தியபோது, ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டனர். மேலும் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

2005-ல் இந்தியில் வெளியான வா லைஃப் ஹோத்தோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ராதிகா ஆப்தே 2012-ல் தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அழகுராஜா, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்திருந்தாலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியளவில் பிரபலமானார்.

இந்த படங்களில் குடும்ப பாங்கான தோற்றங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் சில இந்தி, ஆங்கில படங்களில் நிர்வாணமாக நடித்தும் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார். 2016-ல் வெளியான 'Parched' படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்திருப்பார். லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் சில விளம்பரங்களில் தனது அந்தரங்க பகுதிகளை அப்படியே ஓபனாக காட்டி போல்டாக நடித்து ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினார்.

இதையும் படியுங்கள்:
ஹீரோவான பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி!
Radhika apte

ராதிகா ஆப்தே பிரிட்டிஷ் வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான பெனடிக்ட் டெய்லரை 2012-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சுமார் 11 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே வலை போன்ற உடையை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த உடலையும் காட்டியபடி நடத்திய 'baby bump' போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது கர்ப்ப வயிற்றையும் மகப்பேறு காரணமாக பருமனான தனது உடலையும் வெளிச்சம் போட்டுக் காட்டி இணையதளத்தை பதை பதைக்க வைத்துள்ளார்.

கருவுற்றது முதல் தனது கர்ப்பம் குறித்து அறிந்திருந்தாலும், அது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் அதற்கான காரணத்தையும் ராதிகா ஆப்தே வெளிப்படுத்தியுள்ளார்.

"எங்கள் விஷயத்தில், நாங்கள் இருவரும் குழந்தைகளை விரும்பவில்லை; ஆனால் அது எப்படி இருக்கும் என்பதில் ஆர்வம் இருந்தது" என்றார்.

தனது கர்ப்பகால போட்டோஷூட் குறித்து, ராதிகா தனது தோற்றம் பிடிக்கவில்லை என்றும் பகிர்ந்துள்ளார். மேலும், "குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த போட்டோ ஷூட் செய்தேன்," என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
இன்னும் எத்தனை நாளைக்குதான்? அட வாங்க உடற்பயிற்சி செய்யலாம்! 
Radhika apte

''நான் இவ்வளவு எடை போட்டு பார்த்ததில்லை. இருப்பினும், இது கர்ப்ப காலத்தின் எடை அதிகரிப்பு மட்டுமல்ல; அனைத்து உடல் அசௌகரியங்களும் கூட. எனது உடல் வீங்கியிருந்தது, இடுப்பில் எனக்கு வலி ஏற்பட்டது, தூக்கமின்மை எல்லாவற்றிலும் என் கண்ணோட்டத்தை திசைதிருப்பியது. ஆனால் பின்னர் என் பார்வை மாறியது. நான் இந்த புகைப்படங்களை மிகவும் கனிவான கண்களுடன் பார்க்கிறேன். இப்போது, இந்த மாற்றங்களில் நான் அழகை மட்டுமே பார்க்கிறேன். மேலும் இந்த புகைப்படங்களை நான் எப்போதும் போற்றுவேன் என்று எனக்குத் தெரியும்," என்று நடிகை ராதிகா ஆப்தே குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com