சில முன்னணி நடிகைகள் பட புரமோஷன்களை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு செல்லாமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்! சினிமா மீது கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் ஆர்வமும் பற்றும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். ‘ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார், பெங்குயின், அண்ணாத்தே, மாமன்னன், சைரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த அவர் தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் வருண் தவான் ஜோடியாக 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்க்காக அவர் ரூ.4 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது!
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வந்த, துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் "ForTheLoveOfNyke" என்ற ஹேஷ்டேக் உடன் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்தனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.
அட்லி தயாரிக்கும் வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள பேபி ஜான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் புது பெண்ணான நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ட்ரா மாடர்ன் உடையில் பட விழாவில் கலந்து கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இது திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு புரமோஷனுக்கு சென்றுள்ளார்.
இந்த படவிழாவில் அவர் திருமண பொலிவுடன், சிரித்த முகத்துடன், சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் கழுத்தில் புது தாலியுடன் வந்திருந்தார். கீர்த்தி சுரேஷ் தேவதை போல் காட்சியளித்தார். அவர் கழுத்தில் தாலியுடன் மாடர்ன் லுக்கில் வந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் படுவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் சென்ற பிறகு இவருடைய உடையில் அதிக மாற்றங்கள் வந்ததை சமீப காலமாக பார்க்க முடிகிறது.
அதிலும் திருமணம் முடிந்த கையோடு அவர் இப்படி ஒரு உடையில் வந்திருப்பது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. எப்படி இருந்தாலும் நம் ஊரு பொண்ணு பாலிவுட்டில் வெற்றி பெற்றால் சந்தோஷம் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.