
ராஜ்மா சில்லா என்பது ஒரு சுவையான உணவாகும். இது குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. ராஜ்மா மற்றும் பிற பருப்பு வகைகளை அரைத்து, தோசை மாவு போல மெல்லிய சில்லாக்களாக ஊற்றி தயாரிக்கப்படுகிறது. புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சில்லா, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். சரி வாங்க, இதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ராஜ்மா - 1 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சில்லா சுடுவதற்கு
ராஜ்மா சில்லா செய்முறை:
ராஜ்மா மற்றும் பிற பருப்புகளை 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறவைத்த பருப்புகளை தண்ணீரை வடிகட்டி, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
தோசை கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவவும்.
ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை கல்லில் மெல்லிய வட்டமாக ஊற்றவும்.
மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகும் வரை சுட்டெடுத்தால், ராஜ்மா சில்லா தயார். இதை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.
ராஜ்மா சில்லா ஒரு சத்தான மற்றும் சுவையான சிற்றுண்டி என்பதில் சந்தேகமில்லை. எளிதான இந்த செய்முறையை பின்பற்றி உங்கள் விருப்பம் போல பல்வேறு சுவைகளில் தயாரிக்கலாம் என்பது இதன் சிறப்பு. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை விரும்புபவர்கள், புதிய உணவை முயற்சி செய்ய விரும்புபவர்கள், இந்த ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்யலாம். இந்த சூப்பர் ரெசிபியை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் செய்து கொடுத்து அவர்களது பாராட்டுகளைப் பெறுங்கள்.